25 பந்து.. 10 சிக்ஸ்.. 314 ஸ்ட்ரைக் ரேட்.. நொறுக்கிய இளம் வீரர்.. ரிங்கு சிங் அணி வெற்றி.. உபி டி20 லீக் 2024

0
326
Rinku

தற்போது உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ரிங்கு சிங் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஸ்வஸ்திக் சிகாரா அதிரடியில் மிரட்ட அந்த அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடர் நடந்து முடிய தற்பொழுது டெல்லி மற்றும் உத்தர பிரதேஷ் மாநிலங்களில் டி20 லீக்குகள் நடந்து வருகின்றன. இதில் பல இளம் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த இளம் வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஸ்வஸ்திக் சிகாரா

நேற்று உத்தர பிரதேஷ் டி20 லீக் தொடரில் ரிங்கு சிங் தலைமை வகிக்கும் மீரட் மாவேரிக்ஸ் அணியும் புவனேஸ்வர் குமார் விளையாடும் காசி ருத்ராஸ் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற காசி ருத்ராஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் மழையின் காரணமாக ஒன்பது ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த மீரட் மாவேரிக்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் துபே இரண்டு பந்துகள் சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த நிலையில் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஸ்வஸ்திக் சிகாரா அதிரடியில் மிரட்டி நொறுக்கி விட்டார்.

- Advertisement -

ஸ்வஸ்திக் சிகாரா மொத்தம் 27 பந்துகளை சந்தித்து அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் குவித்து மிரட்டினார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 314 என்பது குறிப்பிடத்தக்கது. சில பந்துகள் எஞ்சி இருக்கும் நிலையில் விளையாட வந்த கேப்டன் ரிங்கு சிங் கோல்டன் டக் ஆனார். 9 ஓவர்கள் முடிவில் அவருடைய அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது.

காசி ருத்ராஸ் தோல்வி

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த காசி ருத்ராஸ் அணிக்கு அதிகபட்சமாக பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த யாஸ்வர்தன் சிங் 14 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது ஆக வந்த சுனில் குமார் ஆட்டம் இழக்காமல் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 பேர்தான்.. என்னை விட சிறப்பா ஒருத்தர் வரப்போறாரு – அஸ்வின் கருத்து

காசி ருத்ராஸ் அணிக்கு மேல் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் சரியான ரன் பங்களிப்பை செய்யவில்லை. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விஷால் சவுத்ரி 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -