இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் ஷாகித் அப்ரிடி அபிஷேக் ஷர்மா.. அவருக்கு ஒரு அட்வைஸ் சொல்லி இருக்கேன் – வாசிம் அக்ரம் பேட்டி

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துபாயில் நடந்த போட்டியில் அபிஷேக் சர்மாவிடம் தான் என்ன உரையாடினேன் என்பது குறித்து பாகிஸ்தான் லெஜண்ட் வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்கு இந்திய தரப்பிலிருந்து பல நட்சத்திரங்கள் போட்டியை பார்க்க துபாய் வந்திருந்தார்கள். இந்திய டி20 அணியில் சூரியகுமார் யாதவ் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் வந்திருந்தார்கள். மேலும் பும்ரா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் என்ன நடந்தது?

இந்த போட்டியின் போது அபிஷேக் சர்மாவிடம் வாசிம் அக்ரம் பேசிய வீடியோக்கள் வெளியானது. தற்போது இது குறித்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “நான் துபாய் மைதானத்தில் டிபி பாக்ஸில் இருந்தேன். எனக்கு அபிஷேக் ஷர்மாவை திடீரென அடையாளம் தெரியவில்லை. அவர் என்னிடம் வந்து நான் அபிஷேக் சர்மா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்பொழுதுதான் அவர் என்று எனக்குத் தெரிந்தது”

“அப்பொழுது நான் அவரிடம் நல்லது பேட்டா என்று கூறினேன். அவர் பேட்டிங் செய்வதை டிவியில் பார்த்திருக்கிறேன் அவருக்கு. நல்ல கிரிக்கெட் எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நான் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கி இருக்கிறேன். இது உங்களின் ஆரம்பம் நீங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறேன்.

- Advertisement -

ஷாகித் அப்ரிடி போலானவர்

“அபிஷேக் ஷர்மாவிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அவர் சிறந்த பீல்டர் என்றும் நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான ஒரு வீரர். 37 பந்துகளில் அதிரடி சதம் அடித்த அப்ரிடி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது அவரைப் போலவே நான் அபிஷேக் சர்மாவை பார்க்கிறேன்”

இதையும் படிங்க : IND vs NZ.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. சாம்பியனாக 2 முக்கிய மாற்றங்கள்.. மாஸ் பரிசோதனைக்கு முயற்சி

“நான் அபிஷேக் ஷர்மாவின் இன்னிங்ஸை பார்த்திருக்கிறேன். அவர் பந்தை மிகவும் கடினமாக அடிக்கக்கூடியவர் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் ஆட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி விளையாடிக் கொண்டே வந்தால் அவர் மிகப்பெரிய வீரராக வருவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by