இந்திய அணி நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் விளையாடி இருந்தாலும் கூட தொடரை வென்றிருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டி பேசி இருக்கிறார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தியது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடியாது என்று மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென எழுந்த விமர்சனங்கள்
இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு தனது போட்டிகளை வென்று செமி பைனலுக்கு தகுதி பெற்றது. மேலும் குறிப்பிட்ட மைதான சூழ்நிலைக்கு விளையாடுவதற்கு தகுந்த அணியை இந்திய அணி கொண்டு இருந்தது. எனவே இந்திய அணி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு மிக அதிகபட்ச வாய்ப்பில் இருந்தது தெரிந்தது.
இதன் காரணமாக திடீரென இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து பெரிய அளவில் வெளியே விமர்சிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அட்டவணை அறிவிக்கப்பட்ட பொழுது அமைதியாக இருந்த அனைவரும் இந்திய அணி சிறப்பாக விளையாட ஆரம்பித்ததும் விமர்சனத்தை ஆரம்பித்தார்கள். இது தொடரின் நடுவில் நிறைய சலசலப்பை உருவாக்கியது.
இந்திய அணி பாகிஸ்தானிலும் வென்று இருக்கும்
இந்திய அணியின் வெற்றி குறித்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்திய அணி உலகில் எங்கு விளையாடு இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும். இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து நிறைய பேச்சுவார்த்தைகள் வெளியில் சென்று கொண்டிருந்தது. இந்த அணி பாகிஸ்தானில் விளையாடியிருந்தாலும் தொடரை வென்று இருக்கும். 2024ஆம் ஆண்டு ஒரு போட்டியில் கூட தோற்காமல் டி20 உலகக் கோப்பையை வென்றார்கள். தற்போதும் அப்படியே சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : IND vs NZ: சாம்பியன்ஸ் கோப்பை இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்காத ஷமி.. காரணம் என்ன?
“இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி இடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது, இதற்கு முன்பாக இலங்கை இடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது என அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மாற்றும் சூழ்நிலை கூட இருந்தது. ஆனால் பிசிசிஐ இவர்கள்தான் எங்கள் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என்று உறுதியாக இருந்தது. அவர்களைத் தொடர்ந்து ஆதரித்தது. இன்று இந்திய அணி சாம்பியன் ஆகிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.