சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி கோப்பையை வென்றது பல வீரர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் முகமது சமிக்கு தான் இது மிகவும் ஸ்பெஷல் ஆனது. ஏனென்றால் சமி விளையாடிய எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்தியா இதற்கு முன் வெற்றி பெற்றது கிடையாது.
தற்போது தான் முகமது சமி முதல் முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் பும்ரா இல்லாத நிலையில் சமிதான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்கினார். இதனால் பல அழுத்தத்தையும் நெருக்கடியையும் சமி சமாளித்தார். அது மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியே சமி மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.
கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமி:
சமி நோன்பு வைக்கவில்லை என்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக விளையாடததை சுட்டிக்காட்டியும் விமர்சித்து வந்தார்கள். எனினும் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத சமி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி கொண்டாட்டம் என்பது ஒவ்வொரு வீரர்களும் வாழ்க்கையிலும் மறக்க முடியாத விஷயமாக இருக்கும். ஆனால் சமி அந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் நகர்ந்து சென்று விட்டார். இதற்கு காரணம் வெற்றி கொண்டாட்டத்தின் போது மது பாட்டில்களை பீய்ச்சி அடித்து வீரர்கள் கொண்டாடினர்.
ரசிகர்கள் பாராட்டு:
மது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்பதால் சமி அந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் மேடையில் இருந்து கீழே இறங்கி விலகி சமி நின்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: IND vs NZ இறுதிப் போட்டியில் சிறந்த பில்டிங்கிற்கான விருது வாங்கியது யார்? பயிற்சியாளரை கட்டி பிடித்து விடாத வீரர்
நாட்டுக்காக தான் நோன்பு வைக்கவில்லை என்றும் மற்றபடி அவர் தன்னுடைய மதத்தை சிறப்பான முறையில் கடைபிடிப்பதாகவும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அதேபோன்று வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு முகமது சமி தாயை கண்ட விராட் கோலி அவரது காலில் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார்.






