எங்க பாகிஸ்தான் ரசிகர்கள்.. இந்த 4 இந்திய வீரர்களை வணங்கறாங்க.. பிசிசிஐ செம பிளான் பண்ணி இருக்கு – வாசிம் அக்ரம் பேட்டி

0
224
Akram

இந்திய அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்பதற்கான பாசிட்டிவான விஷயங்கள் தெரிவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.

இந்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி செல்லும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இந்திய அணியை தங்கள் நாட்டிற்கு வர வைப்பது பாகிஸ்தான் பெரிய முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிசிசிஐ-ன் பக்கா பிளான்

இந்திய அணி ஒன்று நேரடியாக பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும். இல்லையென்றால் மூன்றாவதாக ஒரு நாட்டில் தங்களது போட்டிகளை மட்டும் நடத்துவதற்கு ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும். இல்லையென்றால் தொடரை புறக்கணிக்க வேண்டும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்குவதாக வாசிம் அக்ரம் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்திய அணி தான் விளையாடும் நாளில் லாகூருக்கு இந்தியாவில் இருந்து விமானத்தில் சென்று விட்டு, போட்டியை முடித்துக் கொண்டு உடனடியாக விமானத்தில் பறந்து இந்தியா வருவதற்கு திட்டமிடப்படுவதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் ரசிகர்கள் வணங்குகிறார்கள்

இது குறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்திய அணி பாகிஸ்தான் வந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் என்று நான் நம்புகிறேன். நான் இது சம்பந்தமாக படிக்கும் சில விஷயங்களில் மூலமாக, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு இந்திய அணியை விளையாட அனுப்புவதற்கான பாசிட்டிவான அதிர்வுகளை உணர்கிறேன்”

“இதன்படி இந்திய அணியினர் போட்டி நாளில் லாகூருக்கு வந்து போட்டியில் விளையாடிவிட்டு, அதே இரவு மீண்டும் புறப்பட்டு சென்று விடுவார்கள் என்று தெரிகிறது. இந்திய அணிக்கு எது வசதியோ அப்படி செய்யலாம். ஆனால் இந்திய அணி மிகச் சிறந்த முறையில் பாகிஸ்தானில் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்”

இதையும் படிங்க : இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20.. எப்படி பார்க்கலாம்.?. தொடங்கும் நாள் மற்றும் நேரம்.. முழு விவரங்கள்

“பாகிஸ்தானில் இந்திய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் போன்றவர்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்களின் இளம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீரர்களை வணங்குகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -