இந்தியாவை ஜெயிக்கணும்னு நினைக்காதிங்க.. தயவுசெய்து இதையாவது பண்ணுங்க – வாசிம் அக்ரம் வேண்டுகோள்

0
104
Akram

பாகிஸ்தான் லெஜெண்ட் வாசிம் அக்ரம் ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்து மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் விலகி வரும் நிலையில் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டியில் மோதி கொள்வதற்கு இந்தியாவில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் பொதுமக்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமிருந்து கிளம்பி இருக்கிறது.

- Advertisement -

புறக்கணிப்பு செய்யும் பிசிசிஐ

இந்திய அரசாங்கம் அனுமதித்த காரணத்தினால் பிசிசிஐ பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட ஒத்துக் கொண்டதாக கூறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்தியாவில் இந்த போட்டிக்கு எதிர்ப்பும் இருக்கின்ற காரணத்தினால் பிசிசிஐ அதிகாரிகள் யாரும் போட்டியை நேரில் காண செல்ல மாட்டார்கள் என்கின்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இப்படியான நிலையில் வாசிம் அக்ரம் பொதுவான இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பாகிஸ்தான் அணியின் இருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார். நடைபெறும் போட்டியை விளையாட்டாக மட்டும் எடுத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவை ஜெயிக்க நினைக்க வேண்டாம்

இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது ” கிரிக்கெட்டை தவிர அனைத்தையும் மறந்து விடுங்கள். போட்டியில் ஒரு அணி வெல்லும் ஒரு அணி தோல்வி அடையும் என்பது இயல்பானது. நீங்கள் விளையாட்டை வென்றால் அந்த தருணத்தை அனுபவிக்கவும். போட்டியில் அழுத்தமும் வரும் அதையும் அனுபவிக்கவும். மேலும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தவும். ஏனென்றால் இது விளையாட்டு. இதை நான் இருநாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் கூட ஆட 8 பேட்டர் எதுக்கு?.. 4 பேர் போதும்.. அபிஷேக் இதுல உஷாரா இருப்பா – ஸ்ரீகாந்த் அறிவுரை

“பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஆசியக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டும். பெரிய அணிக்கு எதிராக தோல்வி வருவது சாதாரணமானது. நாம் தொடர் முழுக்க சிறப்பான முறையில் போட்டியிட்டு விளையாட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது. மேலும் இந்திய அணி யுஏஇ அணிக்கு எதிராக வெற்றி பெற்றது போல பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி எளிமையாக இருக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -