பாகிஸ்தான் கூட ஆட 8 பேட்டர் எதுக்கு?.. 4 பேர் போதும்.. அபிஷேக் இதுல உஷாரா இருப்பா – ஸ்ரீகாந்த் அறிவுரை

0
76
Srikanth

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகள் விளையாடுவதற்கு இந்திய அணியில் எட்டு பேட்ஸ்மேன்கள் தேவையில்லை நான்கு பேட்ஸ்மேன்கள் போதும் என பேசி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் அவர் இந்திய அணியில் சிறப்பான இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் விளையாடாதது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், வெறும் ஸ்பின் மயமாக இருப்பது சரியில்லை எனவும் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நான்கு பேட்ஸ்மேன்கள் போதும்

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும் பொழுது “அர்ஸ்தீப் சிங் இந்தியாவின் தொடக்கப் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்க வேண்டும் என நான் முன்பே கூறியிருக்கிறேன். இந்திய அணி 20 ஓவர்கள் விளையாடுவதற்கு எட்டு பேட்ஸ்மேன்கள் தேவையா? குறிப்பாக பாகிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராக இவ்வளவு நீளமான பேட்டிங் வரிசை தேவையா?”

“உண்மையில் நான்கு பேட்ஸ்மேன்களுக்கு மேல் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இந்த உத்தியின் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல், வெறும் ஸ்பின் மயமாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கூட ஹாரிஸ் ரவுப்பை விளையாட வைக்கவில்லை”

- Advertisement -

அபிஷேக் உஷார் ஆகணும்

“அபிஷேக் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடிய ரன்கள் அடித்தார். தன்னால் ரன்கள் எடுக்க முடியும் என அவர் காட்டி இருக்கிறார். பல ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள் போலவே உடலைக் குறிவைத்து பந்து வீசும் போது அவருக்கும் சில தடுமாற்றம் இருக்கிறது”

இதையும் படிங்க : விராட் கோலி இல்ல.. இந்தியாவை தோற்கடிக்கலாம்.. இத மட்டும் செய்யுங்க – மிஸ்பா உல் ஹக் அறிவுரை

“ஐபிஎல் தொடரிலும் இதே வகையில் ஸ்கொயர் லெக்கில் இரண்டு முறை ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் நிச்சயம் அவருடைய மார்பு மற்றும் விலா எலும்புகளை குறி வைத்து வீசும். அதிலிருந்து அபிஷேக் ஷர்மா தப்பி பிழைத்து விட்டால் அவர்களுடைய தாக்குதலை அதிரடியாக அடித்து நொறுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -