டி20 உலகக் கோப்பை 2024

பாகிஸ்தான் டீம்ல இந்த குரூப்ப மட்டும் வச்சுக்கோங்க.. இவங்க எல்லாரையும் தூக்கிடுங்க – வாசிம் அக்ரம் பேட்டி

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் தோற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது. இது குறித்து வாசிம் அக்ரம் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் டி20 உலகக் கோப்பைக்கு பாபர் அசாமை கேப்டனாக கொண்டு வந்தார்கள்.

இதற்கு முன்பாக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. இதற்கு அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக இழந்தது. இங்கிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் பலவீனமாக இருந்தது வெளிப்படையாக தெரிந்தது.

இந்திரலையில் டி20 உலக கோப்பைக்கு வந்து தன்னுடைய முதல் போட்டியில் கத்துக்குட்டி அணியான அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வெல்ல வேண்டிய நிலையில் இருந்து தோற்றது. இந்த இரண்டு தோல்விகளும் அந்த அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற விடாமல் வெளியேற்றி விட்டது.

- Advertisement -

இது குறித்து வாசிம் அக்ரம் தன்னுடைய விமர்சனத்தை முன் வைக்கும் பொழுது “வீரர்கள் சரியாக விளையாடாமல் பெரிய தொடர்களில் அணி தோல்வி அடையும் பொழுது, பயிற்சியாளர்களை மட்டும் மாற்றி விட்டது தங்களை விட்டு விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த முறை பயிற்சியாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் மாற்றி விட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித் பண்றது தெளிவா தெரியுது.. ஜடேஜா டைம் முடிஞ்சது.. இனி அவர்தான் – இர்பான் பதான் பேட்டி

மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” பாபர் அசாம் சதாப் கான் தன்னுடைய நண்பர் என்பதால் அணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பிஎஸ்எல் டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி எக்கட்டுகளை கைப்பற்றிய உசாமா மிர்ரை அணியில் தேர்வு செய்யவில்லை. இப்படி பாரபட்சமான தேர்வு முறைகள் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.

Published by