பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஃபார்முக்கு திரும்பி விட்டதாக வாசிம் அக்ரம் மறைமுகமாக இந்திய அணிக்கு எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து 14ஆம் தேதி இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பெரிய போட்டியில் விளையாடுகிறது.
பாபர் ரிஸ்வான் இல்லாதது சரிதான்
தற்போது ஆசியக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாபர் அசாமை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூறிய வாசிம் அக்ரம் தற்போது தனது முடிவை கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இருவருக்கும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும், அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், ஆனால் சமீப காலத்தில் அவர்கள் சரியாக விளையாடாத பொழுது அணியை விட்டு நீக்கி இருப்பதாகவும் வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.
ஷாகின் திரும்ப வந்துவிட்டார்
2021 ஆம் ஆண்டு ஷாகின் அப்ரிடி சிறந்த பவுலிங் பார்மில் இருந்தார். அப்பொழுது முதல் முறையாக அந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி இருந்தது. இந்த வரலாற்று வெற்றியில் அவருக்கு மிகப்பெரிய முக்கிய பங்கு இருந்தது. பின்பு அவர் தன்னுடைய பவுலிங் பார்மை இழந்து விட்டார்.
இதையும் படிங்க : சூரியகுமாருக்கு ஒரு எச்சரிக்கை செய்யறேன்.. ஆசிய கோப்பைல இதை மட்டும் பண்ணிடாதீங்க – ராபின் உத்தப்பா கருத்து
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “ஷாகின் அப்ரிடி மீண்டும் நல்ல பவுலிங் ஃபார்முக்கு வந்து விட்டார். அவர் ஒவ்வொரு பந்தையும் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுகிறார். நான் அவரிடம் கேட்டது இதைத்தான். அவர் சீக்கிரத்தில் கோபப்படக் கூடியவராகவும் வருத்தம் அடையக்கூடியவராகவும் இருக்கிறார். இதையெல்லாம் விட்டுவிட்டு ஆழமான பார்வையையும், தனக்குத்தானே தீர்வை கண்டறிந்து கொள்ளவும் அவர் முன்னேற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






