இந்திய அணிகளின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆசிய கோப்பை தொடரில் முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ராபின் உத்தப்பா அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் பாகிஸ்தான் மட்டுமே பெரிய அணியாக இருக்கிறது. யுஏஇ மற்றும் ஓமன் என இரண்டு சிறிய அணிகள் இருக்கின்றன. இரண்டாவது சுற்றில்தான் போட்டி கடுமையானதாக இருக்கும்.
உலகக் கோப்பைக்கு முன்னோட்டம்
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் பல நாடுகள் கலந்து கொள்ளும் தொடராக ஆசியக் கோப்பை தொடர் அமைகிறது. எனவே இந்திய அணி டி20 உலகக் கோப்பை தயாராவதற்கு மிக முக்கியமான தொடராக இது அமைந்திருக்கிறது.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாட இருக்கும் அணிகளில் இரண்டு அணிகள் இந்தியாவின் பிரிவில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக இந்த தொடரில் அனைத்து அணிகளையும் சமமான கவனத்துடன் எதிர் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
மனநிறைவு ஆபத்தானது
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது “மனநிறைவு ஆபத்தானது. அதனால் இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் மரியாதையுடன் எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய அணியில் வீரர்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. எனவே நாம்தான் கோப்பையை வெல்வோம் என்று கொஞ்சம் ஓய்வெடுக்க செய்யலாம். ஆனால் இப்படி செய்யாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்”
இதையும் படிங்க : நிதிஷ் ராணா கொடுத்த பார்ட்டியில் கடவுள் திட்டம் வந்தது.. எனக்கு இடம் கிடைத்தது இப்படித்தான் – ரிங்கு சிங் பேட்டி
“நமது அணியின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்போது நாம் விளையாடும் அணிகளில் இரண்டு அல்லது மூன்று அணிகள் நாம் டி20 உலக கோப்பையில் இடம்பெறும் பிரிவில் இடம் பெறலாம். தற்போது அணியில் உள்ள இந்திய வீரர்கள் நன்றாக பழக வேண்டும். ட்ரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலையை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்காக மற்றொருவர் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






