துலீப் டிராபி 4 அணி அறிவிப்பு.. கில் ருதுராஜ் கேப்டன்.. ஜெய்ஸ்வால் முதல் சாய் சுதர்சன் ஒட்டுமொத்த இந்திய வீரர்கள்

0
416
Ruturaj

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் துலீப் டிராபியில் இருந்து ஆண்டு தோறும் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு துலீப் டிராபிக்கு அணிகள் மற்றும் வீரர்கள், கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் சுற்றுக்கான அணிகளில் சில இந்திய மூத்த வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்தத் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது.

வழக்கமாக இந்த தொடருக்கு ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆறு அணிகள் கலந்து கொள்ளும். கடைசியாக இறுதிப் போட்டியின் வழியாக சாம்பியன் அணி கண்டறியப்படும். ஆனால் இந்த முறையை ஏ,பி,சி, டி என நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சுற்றுகள் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் ஆகும்.

- Advertisement -

இந்த முறை அறிவிக்கப்பட்டிருக்கும் ஏ, பி, சி, டி நான்கு அணிகளுக்கும் சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நான்கு வீரர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் விளையாடுகிறார்கள். இளைய வீரர்களில் எல்லோருமே விளையாடுகிறார்கள்முதல் சுற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் பும்ரா விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவில்லை. காயத்தில் இருக்கும் சமியும் விளையாடவில்லை.

2024 துலீப் டிராபி முதல் சுற்றுக்கான நான்கு அணிகள் :

- Advertisement -

அணி ஏ: ஷுப்மான் கில் (கே), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (வி.கீ) கேஎல்.ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா , மற்றும் ஷஸ்வத் ராவத்.

பி அணி: அபிமன்யு ஈஸ்வரன் (சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர்.சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி மற்றும் என் ஜெகதீசன் (வி. கீ).

இதையும் படிங்க : இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக.. பாகிஸ்தான் முன்னாள் கோச் தேர்வு.. ஜெய் ஷா முக்கிய அறிவிப்பு

அணி சி: ருதுராஜ் கெய்க்வாட் (கே), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (வி. கீ), சூர்யகுமார் யாதவ், பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, மயங்க் மார்கண்டே மற்றும் சந்தீப் வாரியர்.

அணி D: ஸ்ரேயாஸ் லியர் (கே), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் பாடிக்கல், இஷான் கிஷன் (வி. கீ), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ். (வி. கீ) மற்றும் சௌரப் குமார்.

- Advertisement -