இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் தோல்வியை என்னால ஜீரணிக்க முடியலை.. எங்க கேப்டன் கூட அதே தப்ப செய்றாரு – வாசிம் அக்ரம் வருத்தம்

நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மொத்தமாக சரணடைந்தது குறித்து வாசிம் அக்ரம் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

2025 ஆசியக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட பெரிய போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பரிதாபம்

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரது பந்தும் கைகளில் இருந்து எவ்வாறு வருகிறது என்பதை பார்க்காமல் மிகவும் தடுமாறினார்கள். இதன் காரணமாக அவர்கள் தவறான ஷாட் விளையாடி விக்கெட்டை இழந்தார்கள்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் மொத்தம் 63 டாட் பந்துகளை விளையாடி இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களை ரீட் செய்ய முடியாத காரணத்தினால் இந்த தடுமாற்றம் உருவானது. பாகிஸ்தான் கேப்டன் வரையில் மோசமான ஷாட் விளையாடி விக்கெட்டை இழந்தார்கள்.

- Advertisement -

வாசிம் அக்ரம் வருத்தம்

இது குறித்து அவர் பேசும் பொழுது “குல்தீப் யாதவ் பந்து வீசும் விதத்தில் பேட்ஸ்மேன்களால் அவரது கையில் இருந்து வரும் பந்தை சரியாக பார்க்க முடியாது. நான் போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது சுனில் கவாஸ்கர் இடம் பேசினேன். அவர் இது குறித்து என்னிடம் சொல்லும்போது குல்தீப் யாதவ் கையில் இருந்து வரும் பந்தை ரீட் செய்ய முடியாவிட்டால், அந்த வகையான பந்துவீச்சை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று சொன்னார். நீங்கள் குல்தீப் யாதவுக்கு எதிராக ஸ்வீப் விளையாடுகிறீர்கள் என்றால் நீங்கள் அவரது பந்தை ரீட் செய்யவில்லை என்று அர்த்தம்”

இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவிடமுள்ள இந்த டெக்னிக் உலகில் எந்த பேட்ஸ்மேனுக்கும் கிடையாது.. ரெய்னா மாதிரி பயமுறுத்துறாரு – அஸ்வின் பேட்டி

“பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் பொழுது 63 டாட் பந்துகளை விளையாடியது. இது மொத்தம் பத்து ஓவருக்கும் அதிகம். இது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெருமை. ஹசன் நவாஸ், முகமது நவாஸ் மற்றும் எங்கள் கேப்டன் பேட்டிங் செய்த விதத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது. இவர்கள் திறமையான வீரர்கள் ஆனால் எந்த பந்துவீச்சாளரை அடிக்க வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts