நான் மெசேஜ் செய்தேன்.. ஆப்கானிடம் தோல்விக்கு அந்த இங்கிலாந்து வீரர் அழுதுவிட்டார் – வாசிம் அக்ரம் வருத்தம்

0
783
Akram

நடப்பு சாம்பியன் டிராபியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த காரணத்தினால் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர் அழுததாக தன்னிடம் தெரிவித்ததாக வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது. மெகா இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் இறுதியில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. மேலும் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்திருந்த காரணத்தினால் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது.

- Advertisement -

குறைந்து போன விமர்சனங்கள்

இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்தது. அப்போது இங்கிலாந்து அணி விளையாடிய விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் இங்கிலாந்து முன்னாள் வீரர்களிடமிருந்து வந்தது. மைக்கேல் வாகன் மற்றும் கெவின் பீட்டர்சன் போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள்.

தற்போது இங்கிலாந்து அணி தோல்வி அடைந்திருப்பது இங்கிலாந்து முன்னாள் வீரர்களை மிகவும் சோர்வாக மாற்றிவிட்டது. இங்கிலாந்து அணியின் இந்த தோல்வி தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என மைக்கேல் வாகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அந்த வீரர் அழுததாக தெரிவித்தார்

இதுகுறித்து பேசி உள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இங்கிலாந்து அணி விளையாடும் விதம், கிரிக்கெட் விரும்பிகளான இங்கிலாந்துக்காரர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் சோகத்தையும் உண்டாக்கி இருக்கும். இங்கிலாந்து முன்னாள் வீரரான என்னுடைய நண்பர் நீல் ஃபேர்பிதருக்கு இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது குறித்து மெசேஜ் செய்தேன். அப்போது அவர் என்னிடம் இந்த தோல்வியால் தான் அழுது விட்டதாக தெரிவித்தார். கிரிக்கெட் விளையாட்டில் இது சகஜம் என்று நான் அவரை தேற்றினேன்”

இதையும் படிங்க : இங்கிலாந்த விட்றாதிங்கனு குல்பதின் கிட்ட சொன்னேன்.. இன்னொன்னும் சொன்னேன் – சோயப் அக்தர் வெளியிட்ட தகவல்

“இங்கிலாந்து அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது மூன்று ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் இருக்கிறார்கள். எட்டு ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு ஒரு முழுமையான பந்துவீச்சாளர் இல்லை. அந்த எட்டு பேரும் ஐந்தாவது இடத்திற்கு முழுமையான பந்துவீச்சாளர் தேவையை ஈடு செய்யவில்லை. ஜோ ரூட் பந்து வீச வர வேண்டியதாக இருந்தது. அவர்கள் ஏன் இப்படியான இத்தனை பந்துவீச்சாளர்களை அணியில் தேர்ந்தெடுத்தார்கள்” என்று தெரியவில்லை எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -