இங்கிலாந்த விட்றாதிங்கனு குல்பதின் கிட்ட சொன்னேன்.. இன்னொன்னும் சொன்னேன் – சோயப் அக்தர் வெளியிட்ட தகவல்

0
693
Akthar

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆப்கானிஸ்தான் அணியின் குல்பதின் நைப் இடம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் குறித்து தான் தெரிவித்தது என்னவென்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வென்று அந்த அணியை வெளியேற்றியது. ஆப்கானிஸ்தான அணி தங்களுடைய கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் சோகம்

தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் தொடர் ஆரம்பித்த ஆறாவது நாளில் தொடரில் இருந்து வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடுமையாக கோபப்படுத்தி இருக்கிறது. அவர்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பற்றி சோயப் அக்தர் மிகவும் கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அதே சமயத்தில் தங்களது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் அணி மீது நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு சில வார்த்தைகளை அக்தர் கூறியிருக்கிறார். மேலும் அவர் கேட்டுக்கொண்டபடியே இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அவரை மகிழ்ச்சி படுத்தி இருக்கிறது.

- Advertisement -

குல்பதினிடம் ஏற்கனவே கூறினேன்

இதுகுறித்து பேசி இருக்கும் சோயப் அக்தர் கூறும் பொழுது “வாழ்த்துக்கள் ஆப்கானிஸ்தான்! உங்களது வெற்றிக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதினிடம் எப்படியாவது இங்கிலாந்து அணியை தோற்கடியுங்கள் என்று நான் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் என்னிடம் கவலைப்படாதே சகோதரா நாங்கள் அவர்களை விட்டு விட மாட்டோம் என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவையும் விட்டு விடாதீர்கள் என்று சொன்னேன். துபாயில் இருந்த போது எப்படி வெற்றி பெற வேண்டும்? என்பது குறித்து அவர்களிடம் பேசினேன்”

இதையும் படிங்க : இங்கிலாந்து இத செய்யலனா யாரும் மதிக்க மாட்டாங்க.. ஆச்சரியம் ஒன்னும் இல்ல – ரவி சாஸ்திரி மைக்கேல் வாகன் கருத்து

“நீங்கள் ஆப்கானிஸ்தானை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களது விளையாட்டில் இப்பொழுது முதிர்ச்சி வந்திருக்கிறது. நீங்கள் ஒரு பெரிய அணியை வென்று விட்டீர்கள். நீங்கள் இந்த நாளை கொண்டாடுங்கள். அதே வேளையில் நீங்கள் அரை இறுதி தாண்டி விளையாட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -