இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே இந்திய அணி டிரா செய்யாதது சரியான முடிவு என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் கடைசி ஒரு மணி நேரத்தின் போது போட்டியை டிரா செய்து கொள்ள இந்திய வீரர்களிடம் கேட்டார். அப்பொழுது களத்தில் இறந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார்கள். இதற்கு இங்கிலாந்து தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் டீம் அடிப்படையை மீறி செயல்பட்டு விட்டது என இங்கிலாந்து தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்திய அணி செய்த விஷயம் தன்னை விரக்தி அடைய வைத்ததாக கூறியிருந்தார். இந்திய அணி செய்யக்கூடாத காரியத்தை செய்து விட்டது போல பிம்பம் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய தரப்பில் பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவு மிகவும் சரியானது எனவும், அந்த சூழ்நிலையில் தான் களத்தில் இருந்திருந்தால் மீதமிருந்த 15 ஓவரையும் வீசச் சொல்லி இங்கிலாந்து அணியை கட்டாயப்படுத்தி இருப்பேன் என்றும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
குக் இந்தியாவுக்கு ஆதரவு
இதுகுறித்து அலைஸ்டர் குக் கூறும் பொழுது ” இந்திய அணி உத்வேகம் பெறுவதற்காக தொடர்ந்து விளையாட எடுத்த முடிவு சரியானது. நீங்கள் களத்தில் இருந்து 140 ஓவர்கள் விளையாடும் பொழுது விரக்தி அடைவீர்கள். இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணிக்கு சிறிது விரக்தி மனநிலை உருவாகி இருக்கிறது”
இதையும் படிங்க : நான் கேப்டனா இருந்தா ஸ்டோக்ஸ்க்கு வேற பாடம் நடத்தி இருப்பேன்.. பாஸ் ரெட்ட வேஷம் போடாதீங்க – அஸ்வின் விமர்சனம்
“இந்தியா ஏன் தொடர்ந்து விளையாட முடிவை எடுத்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இந்த போட்டியின் ஸ்கோர் கார்டை ஐந்து வருடங்கள் பார்த்தால் போட்டியை காப்பாற்றுவதற்கான இரண்டு சிறந்த சதங்களை கீழ் வரிசையில் பார்ப்பீர்கள். மேலும் இதில் கில் சதமும் இருக்கிறது. அதே புரூக் 37 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியது உங்களுக்கு தெரியப்போவதில்லை. எனவே இந்தியா எடுத்த முடிவு சரியானது” என்று கூறி இருக்கிறார்.






