ஜடேஜா இடம் எனக்கு வேண்டாம்.. நான் இதை செஞ்சா மட்டுமே போதும் – வாஷிங்டன் சுந்தர் பேட்டி

0
33
Sundar

இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளை வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள், ருதுராஜ் 28 பந்தில் 49 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் அதிரடி வீரர் சிக்கந்தர் ராஸா விக்கெட்டும் அடக்கம். எனவே ஆட்டநாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்கப்பட்டது. அப்பொழுது ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை இந்திய அணியில் அவர் பிடிப்பாரா? என்று கேட்கப்பட்டது.

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும் பொழுது “நான் எந்த இடத்தில் சிறப்பாக செயல்பட வேண்டுமோ அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக தான் என்னுடைய தயாரிப்புகளில் சரியாக சிறப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் நூறு சதவீதம் கொடுக்க வேண்டும். இது நான் சமரசம் செய்து கொள்ளாத ஒன்று.

நான் என்னுடைய தயாரிப்புகளில் கவனம் செலுத்துவது என்னை நிகழ்காலத்தில் வைத்திருக்கிறது. மேலும் என்னுடைய திறமை குறித்து என்னுடைய நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்தியாவுக்காக விளையாட எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. மேலும் நான் இதற்கு ஆசிர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 13 ஓவர்.. சிஎஸ்கேவின் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்.. எம்எல்சி 2024

நான் தொடர்ந்து என் வேலையைச் செய்து என்னை தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நான்சிறப்பாக இருக்கும் பட்சத்தில், நான் எல்லா வழிகளிலும் கவனிக்கப்படுவேன். இந்திய அணிக்கும் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவேன்” என்று கூறியிருக்கிறார்.