இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் கில் இருவரும் அணியை எவ்வாறு வழிநடத்தினார்கள் என்பது குறித்து வாஷிங்டன் சுந்தர் பாராட்டி இருக்கிறார்.
நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் பாட்டிங் செயல்பாடு இந்திய அணி தொடரை டிரா செய்வதற்கு மிகப்பெரிய அளவில் உதவியது.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கும் பொழுது வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் வாய்ப்பு கொடுத்தார். இதன் காரணமாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் அந்தத் தொடரின் நடுவிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ஓய்வு முடிவை எடுத்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கப்படாத வாஷிங்டன் சுந்தர் உடனடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
“கம்பீர் இப்பொழுதும் ஐந்தாம் நம்பர் ஜெர்சி அணிந்து திரும்பி வரும் அளவுக்கு இருக்கிறார். ஒருவேளை அப்படியே அவர் திரும்பி வந்தால் நான் அவருக்கு ஐபிஎல் தொடரில் பந்து வீச விரும்ப மாட்டேன். அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் நம் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கும் பொழுது நாம் போராடி வெல்வதற்கான உத்வேகம் கிடைக்கிறது. மேலும் தொடரின் முடிவில் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
இதையும் படிங்க : நாடு தான் முக்கியம்.. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட கூடாது.. உணர்ச்சி வசப்பட்டு பேசிய ஹர்பஜன் சிங்
“இங்கிலாந்து தொடர் முழுவதும் ட்ரெஸ்ஸிங் ரூம் மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் இருந்ததற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருக்கும் நான் நன்றி சொல்கிறேன். அவர்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து எங்களிடம் மிகத் தெளிவாக தொடர்பு கொண்டார்கள். எங்கள் மீது இருவரும் நல்ல நம்பிக்கை வைத்தார்கள். இது நாங்கள் சிறப்பாக செயல்பட உதவியது” என்று கூறி இருக்கிறார்.