இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய இந்திய ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை வெளியிட்டார். இது பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோகித் வெளியிட்ட கருத்து
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே இந்த முடிவை எடுத்து விட்டதாகவும், ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைப்பதற்காக தானே சமாதானப்படுத்தி அஸ்வினை நிறுத்தி வைத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் இது சம்பந்தமான பின்னணி காரணங்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுவார் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கும் விராட் கோலி தான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விட்டதாக உருக்கமாக தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தற்பொழுது திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய பேச்சு பொருளாக மாறிவிட்டார்.
எல்லாவற்றுக்கும் நன்றி நண்பரே
இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் விராட் கோலி தெரிவிக்கும் பொழுது “நான் உங்களுடன் 14 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இன்று நீங்கள் ஓய்வு பெறுகிறேன் என்று கூறிய பொழுது அது என்னை உணர்ச்சிவசப்பட செய்துவிட்டது. நாம் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வருடங்கள் எனக்கு பிளாஷ்பேக் ஆக வந்தது. உங்களுடைய பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன்”
இதையும் படிங்க : அஸ்வின் ஆஸி வந்ததுமே முடிவெடுத்துட்டார்.. நான் சமாதானப்படுத்தி ஆட வச்சேன்.. இதான் காரணம் – ரோகித் சர்மா பேட்டி
“நீங்கள் எப்பொழுதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் என நினைவு கூரப்படுவீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் வாழ்வில் அடுத்து நடக்க இருக்கும் எல்லா விஷயங்களும் சிறப்பானதாக அமையும். உங்களுக்கும் உங்களுடைய நெருக்கமானவர்களுக்கும் என்னுடைய அன்பும் மரியாதையும். நீங்கள் தந்த எல்லாவற்றுக்கும் நன்றி நண்பரே” என்று கூறி இருக்கிறார்.






