காயம் அடைந்த டேவிட் வார்னருக்குப் பதிலாக இவரை ஒப்பனராக ஆட வையுங்கள் – ரிக்கி பாண்டிங் வலியுறுத்தல்

0
291
David Warner and Ricky Ponting

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பாக அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 152 ரன்கள் குவித்தார். 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 297 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது

- Advertisement -

20 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அந்த இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவாரா ??

ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முதல் இன்னிங்சில் 94 ரன்கள் குவித்து மிகப்பெரிய அடித்தளத்தை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். நேற்று அவருடைய விலா பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்கேன் ரிப்போர்ட் தகவலின் அடிப்படையில் கூறப்பட்டது. இருப்பினும் அவரால் இரண்டாவது இன்னிங்சில் விளையாட முடியும் என்றும் செய்தி கூறப்பட்டது. இன்று ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கிய பொழுது அவருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க இன்னும் சில நாட்கள் இருக்கையில், நிச்சயமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று ஒருபக்கம் செய்தி கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் காயத்தின் தன்மை அதிகம் ஆனால் அவரால் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மறுபக்கம் வேறு செய்தி கூறப்படுகின்றது

- Advertisement -

இந்நிலையில் டேவிட் வார்னரால் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் போனால், அவருக்கு பதிலாக உஸ்மான் கவாஜா ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாட வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் 14 அரை சதங்கள் மற்றும் 8 சதங்களுடன் 2887 ரன்களை உஸ்மான் கவாஜா குவித்திருக்கிறார். அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 40.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 50.55 என்பதும் குறிப்பிடத்தக்கது.