இந்த ஐபிஎல் முடியட்டும்… பத்திரனாவை என்னைவிட பிஸ்தா பவுலராக மாத்தி காட்றேன் – மலிங்கா சூளுரை!

0
2439

ஐபிஎல் முடிந்து வரட்டும், அவரை சில டெஸ்ட் போட்டிகள் விளையாட வைத்து, எப்படி இன்னும் அவரை மெருகேற்றலாம் என திட்டமிடுகிறேன்! என்னைவிட சிறந்த பவுலராக மாற்றிக்காட்டுகிறேன் என பேசியுள்ளார் மலிங்கா.

இந்த வருட ஐபிஎல் தொடரில் பல அணிகளால் பேசப்பட்டு வரும் பந்துவீச்சாளராக இருந்து வருபவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் மதீசா பத்திரானா. இவர் கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் ஜாம்பவானாக திகழ்ந்து வந்த மலிங்கா பந்துவீசுவதைப் போலவே வீசுகிறார். அவரைவிட இன்னும் கீழே வீசுகிறார்.

- Advertisement -

இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு திணறி வருகின்றனர். குறிப்பாக டெத் ஓவர்களை இவர் வீசுவதால் சென்னை அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இது அமைந்து வருகிறது. 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

“இலங்கை அணிக்கு எதிர்கால வீரராக இவர் திகழ்வார். இவரை போதுமானவரை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடவைக்க வேண்டும். மேலும் ஐசிசி தொடர்களில் பெரிதளவில் பயன்படுத்த வேண்டும்.” என்று மகேந்திர சிங் தோனி தனிப்பட்ட முறையில் தனது பேட்டியில் பத்திரனா பற்றி கூறியுள்ளார். இதற்கு முன்னர் தோனி வேற எந்த வீரரை பற்றியும் வானுயர் புகழ்ந்து பார்த்ததில்லை என்பதால், இன்னும் கவனம் பத்திரானா மீது விழுந்திருக்கிறது.

இந்நிலையில் பத்திரானா என்னுடைய பொறுப்பு, நான் அவரை என்னைவிட சிறந்த பவுலராக மாற்றிக்காட்டுகிறேன் என கூறியுள்ளார் மலிங்கா. பத்திரானா எதிர்காலம் குறித்து மலிங்கா கூறியதாவது:

- Advertisement -

“நான் எப்படியாவது இவரை என்னை விட சிறந்த பவுலராக மாற்றிவிட வேண்டும். ஐபிஎல் முடிந்து வந்தவுடன் உடனடியாக நடைபெறும் டெஸ்ட் தொடரில் இவரை இணைத்து கவனிக்க உள்ளேன். அத்துடன் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வைக்க உள்ளேன். எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க உள்ளேன். அத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் 10-15 டெஸ்ட் போட்டிகள் விளையாடிவிட்டால், அதற்குள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அவரது பவலிங்கில் முன்னேற்றம் கிடைத்துவிடும்.

பத்திரனா இலங்கை அணி விளையாட முன்னரே, அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி நாம் பேசி வருகிறோம். அவருக்கு தற்போது 20 வயது தான் ஆகிறது. விரைவாக இலங்கை அணிக்கு விளையாடுவார் என்று கருதுகிறேன். அவரின் பந்துவீச்சை மேன்மேலும் மெருகேற்றுவதற்கு முயற்சிகளை விரைவாக எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.” எனக் கூறினார்.