“பீல்டர்களை மட்டுமல்ல என்னையும் எழுப்பறிங்க விராட் பாய்!” – அக்சர் படேல் பார்ட்னர்ஷிப் பற்றி பேச்சு!

0
314
Axar

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நான்காவது மற்றும் கடைசிப் போட்டி தற்பொழுது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்க, உஸ்மான் கவஜா 180, கேமரூன் கிரீன் 114 என இரண்டு சதங்கள் மூலம் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் முதல் இன்னிங்சில் குவித்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்து அபார துவக்கத்தை தந்தார். இரண்டாவது நாள் ஆட்டம் முடிவின்போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் 190 ரன்கள் பின்னிலையில் இருந்தது.

இதற்கு அடுத்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 186 ரன்கள் விளாசினார். முக்கியமான கட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கட்டுகளை இழந்திருந்த பொழுது விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவி செய்தார். அவர் 113 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 591 ரன்கள் குவித்தது. இதை எடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி விக்கட் இழப்பு இல்லாமல் மூன்று ரன்கள் எடுத்திருக்கிறது.

விராட் கோலி உடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசி உள்ள அக்சர் பட்டேல்
” அவர் என்னை ஒருங்கிணைப்பு மட்டுமே செய்தார். இவ்வளவு சூடான நிலையில் அவருடன் விக்கட்டுகளுக்கு இடையே ரண்களுக்கு ஓடுவது பாசிட்டிவான ஒன்று. சில சமயங்களில் அவர் பீல்டர்களை மட்டுமில்லாமல் என்னையும் எழுப்புகிறார் என்று நான் அவரிடம் சொன்னேன். வெளிப்படையாக சொல்வதென்றால் இந்த முறையும் நான் சதத்தை தவற விட்டு விட்டேன். இதற்கு முன்பு இரண்டு முறை தவறவிட்டேன். இன்று எனக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க ஒரு ஆள் இருந்தும் நான் தவறவிட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் எனது நம்பிக்கையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பினேன். விராட் பாய் என்னிடம் விக்கெட்டில் பெரிதாக ஒன்றுமில்லை கொஞ்ச நேரம் நின்றால் எளிதாகி விடும் என்று கூறினார். நான் கொஞ்சம் பெரிய ஷாட்களுக்கு போய்க் கொண்டிருந்த பொழுது மட்டும் அவர் என்னிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னார். எங்களுக்கு இடையே இப்படியான உரையாடல்கள் நடந்து கொண்டிருந்தது இது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க உதவியது!” என்று கூறியிருக்கிறார்!