“சமி பவுலிங் பண்றதுக்காக காத்துகிட்டு இருக்கேன்.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!” – ஷேன் வாட்சன் பிரமிப்பான பேச்சு!

0
7264
Watson

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதி வரும் முக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தார். மேலும் இந்திய அணியில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும்பொழுது மிகவும் சிறப்பாக விளையாடுகிறது. அதே சமயத்தில் இலக்கை துரத்தினால் தடுமாறுகிறது. எனவே இந்திய அணி கேப்டனின் இந்த முடிவு சரியாகவே இருக்கிறது.

தற்போது இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் முகமது சமி வந்து சேர்ந்த பிறகு, மிகவும் வலிமையானதாக காணப்படுகிறது. எதிரணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலிங் யூனிட் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறுவது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த நிலையில் முகமது சமி பற்றி பேசி உள்ள ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் கூறும் பொழுது ” முகமது சமி இவ்வளவு சிறப்பான பவுலிங் ஃபார்மில் இருக்கும் பொழுது, அது தவறவே விட கூடாத வாயில் நீர் ஊற வைக்கும் சம்பவம். அவர் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்தை உள்ளே வெளியே என்று பேட்டில் அடிப்பார். அதேபோல் ஆப் ஸ்டெம்பில் உச்சியில் அடிப்பார்.

- Advertisement -

சமி விக்கெட்டை கேட்ச், போல்ட் எல்பிடபிள்யு என்று எப்படி எடுத்தாலும் அது நம்ப முடியாத அளவிற்கு சிறப்பானதாக இருக்கும். மேலும் ஆடுகளத்தில் உதவி இல்லாவிட்டாலும் கூட அவரால் காற்றைப் பயன்படுத்தி சீமில் பிரமாதப்படுத்த முடியும்.

உண்மையில் சமி நம்ப முடியாத அளவுக்கு திறமையான பந்துவீச்சாளர். சிராஜ் இருந்த காரணத்தினால் அவர் விலக்கி வைக்கப்பட்டார். பும்ரா மிகவும் சிறப்பாக இருக்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வந்து செயல்படும் விதம் அபாரமானது. அவர் வந்ததும் இந்திய அணியின் பவுலிங் யூனிட் பிரமாதமாக மாறிவிட்டது!” என்று கூறியிருக்கிறார்!