யாருமே பேசலனா.. பாவம் விராட் ரோஹித் என்ன பண்ணுவாங்க.. இது கிரிக்கெட்டுக்கு நல்லவல்ல.. முன்னாள் இந்திய வீரர் ஆதங்கம்

0
171

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர்.

இதுகுறித்து விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் ஓய்வு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பல கிரிக்கெட் வீரர்கள் இடையே மட்டும் இன்றி ரசிகர்கள் இடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஜாம்பவான் ஆன விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த செய்தி அனைவரிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் இந்த இருவருக்கும் சரியான வழியனுப்புதலை இந்திய நிர்வாகம் செய்திருக்க வேண்டும் என அப்போதே சில விவாதங்கள் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விராட் மற்றும் ரோஹித் இருவருக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையே சரியான பேச்சு வார்த்தை இல்லாததே இவர்கள் இருவரும் விரைவாக ஓய்வு பெற்றதற்கு காரணம் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” உங்கள் நாட்டுக்காக நீங்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அப்போதே நீங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு ஒரு சரியான வழி அனுப்புதல் நடைபெற வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓய்வு பெற்ற போது ஒரு பெரிய தகவல் தொடர்பு இல்லை என்று நான் நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அப்போதே இவர்கள் இருவரிடம் பேசி இருக்க வேண்டும். இது கிரிக்கெட்டுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல விஷயம் கிடையாது.

இதையும் படிங்க:தோனி இல்லை.. எனக்கு உதவியது இந்த முன்னாள் சிஎஸ்கே வீரர் தான்.. கலீல் அகமது நெகிழ்ச்சி

விராட் கோலியின் ஓய்வும் இப்படித்தான் நடந்தது. விராட் கோலி இதைவிட ஒரு சிறந்த மரியாதைக்கு தகுதியானவர். அவருக்கு இன்னும் இரண்டு வருட கிரிக்கட் மீதம் உள்ளது. இங்கிலாந்து அணிக்கிடையே இந்திய அணியின் வெற்றி அவரைப் பற்றிய பேச்சுக்கள் நிறுத்துவதற்கு காரணமாக அமைந்தது. விராட் கோலி மாதிரியான ஒரு கிரிக்கெட் வீரரை இந்திய அணி பெறுவதற்கு கடினமான விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -