ஐபிஎல் 2025

தம்பி ரிஷப் பண்ட் உடனே தோனிக்கு போன் பண்ணு.. இப்ப இந்த நீ 2 விஷயத்தை செய்யணும் – சேவாக் அறிவுரை

நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் உடனடியாக தோனிக்கு ஃபோன் செய்து பேச வேண்டும் என வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷபன்ட் மொத்தம் 11 இன்னிங்களில் விளையாடி 99 ஸ்ட்ரைக் ரேட்டில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவருடைய ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசன் மிக மோசமானதாக அமைந்திருக்கிறது. மேலும் அது லக்னோ அணிக்கும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சனையை உண்டு செய்து வருகிறது.

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரிஷப் பன்ட் நல்ல முறையில் விளையாடவில்லை. அங்கு ஏற்பட்ட வீழ்ச்சி அப்படியே அவருக்கு ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் ரிஷப் பண்ட்டை மிகப்பெரிய அளவில் நம்பி வருகிறார்.

தற்போது ரிஷப் பண்ட்டுக்கு இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தைதான் தருகிறார்கள். மேலும் ஒருநாள் இந்திய அணியில்தான் இந்த இடமும் காலியாக இருக்கிறது. எனவே அவர் தொடர்ந்து இந்திய அணிக்கு வெள்ளை பந்து போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து இந்திய வெள்ளை பந்து அணிகளில் இருந்து புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

தோனிக்கு ஃபோன் செய்யவும்

இது குறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” ரிஷப் பண்ட் தன்னுடைய பழைய ஐபிஎல் பேட்டிங் வீடியோக்களை திரும்ப பார்க்க வேண்டும். அதுதான் எப்படி ரன்கள் குவித்திருக்கிறேன் என்பதை பார்க்கும் பொழுது பாசிட்டிவான மனநிலை உருவாகும். ஏனென்றால் நாங்கள் பல நேரங்களில் எங்களுடைய வழக்கமான விஷயங்களை மறந்து விடுகிறோம். இது விபத்திற்கு முன்னான ரிஷப் பண்ட் போல இல்லை. நானும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். வழக்கத்தில் இருந்து ஏதாவது மாறினால் அது ரன்கள் குவிப்பதை பாதிக்கிறது”

இதையும் படிங்க : 12 வருஷ அந்த சம்பவம்.. எனக்கு அது முன்னவே தெரியாதது ரொம்ப சந்தோசம்.. இதான் முக்கியம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“ரிஷப் பண்ட் இடம் மொபைல் இருக்கிறது. அதை எடுத்து அவர் யாரையாவது அழைத்து இது சம்பந்தமாக பேச வேண்டும். அவருக்கு முன்மாதிரியாக தோனி இருக்கிறார். எனவே அவர் தோனியிடம் பேசலாம். நாம் நெகட்டிவாக இருக்கும் பொழுது இப்படி செய்வது நிச்சயம் நம்மை ஒளிரச் செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts