தற்போது இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவை இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் உடன் ஒப்பிடக்கூடாது என சௌரவ் கங்குலி கூறி இருக்கிறார்.
இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இருந்தபோதிலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்திருக்கிறார்.
கங்குலியின் வீரர்
கிரிக்கெட் உலகில் இதுவரையில் விளையாடிய வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட் வரை மிக அதிரடியாக விளையாடியவர் வீரேந்தர் சேவாக். அவர் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். அதிரடி வீரராக இருந்தபோதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரராக இருக்கிறார்.
வீரேந்தர் சேவாக் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு இருந்தார். வெறும் அதிரடி பேட்ஸ்மேன் ஆக மட்டுமே அவர் இல்லை. அபிஷேக் ஷர்மா தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். அதே சமயத்தில் அவர் வேறு வடிவங்களில் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் கூட ஒப்பிடக்கூடாது
இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா நல்லவீரர். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு கொண்டு வரப்படுவார் என்று நினைக்கிறேன். அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு எனக்கு பிடிக்கும். அதே சமயத்தில் அவரை சேவாக் உடன் ஒப்பிட கூடாது. ஏனென்றால் சேவாக் முழுமையான சாம்பியன் வீரர். அபிஷேக் ஷர்மாவும் அப்படி ஆக முடியும்”
இதையும் படிங்க : எங்க பாகிஸ்தான விடுங்க.. ஆனால் இந்தியா செமி பைனல் போகவே போகாது – முகமது அமீர் மீண்டும் கருத்து
“எனக்கு ஜெய்ஸ்வால் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அவர் மூன்று ஃபார்மட்டிலும் விளையாடும் தகுதி பெற்ற வீரர். இந்திய வீரர்கள் இவ்வளவு சிறப்பாக இருந்தாலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஜெயஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவருமே மூன்று வடிவத்திலும் விளையாட முடியும். சிறந்த வீரர்களான இவர்களை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது” என்று கூறி இருக்கிறார்.






