தோனி விராட்டுக்குதான் இங்க எல்லாமே.. இந்த பையன் எல்லாம் ரொம்ப பாவம் – சேவாக் அனுதாபம்

0
775
Rathi

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐபிஎல் விதிகளை மீறிய காரணத்திற்காக லக்னோ சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது நியாயமானது இல்லை என வீரேந்தர் சேவாக் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது லக்னோ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி தன்னுடைய விக்கெட் கொண்டாட்டத்திற்காகவும் களத்தில் நடந்து கொண்ட முறைக்காகவும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டார்.

- Advertisement -

பாரபட்சமான அணுகுமுறை

ஐபிஎல் தொடரை எடுத்துக் கொள்ளும் பொழுது பெரிய வீரர்கள் பலமுறை ஐபிஎல் விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவது கிடையாது. மேலும் அபராதம் மட்டுமே மிகவும் குறைந்த அளவு விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அது கூட செய்யப்படுவது கிடையாது.

மிக முக்கியமாக விராட் கோலிக்கு காலத்தில் நிறைய முறை பிற வீரர்களுடன் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அவருடைய கொண்டாட்டங்கள் எப்பொழுதும் ஆக்ரோஷமான முறையிலேயே இருந்திருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது நடுவர்களின் முடிவை எதிர்த்து மிகப்பெரிய வீரர் தோனி களத்திற்கு வந்து நடுவர்களுடன் கோபமாக சண்டையிட்டார். இது யார் செய்ததை விடவும் மிகவும் தவறானது. இருந்த போதிலும் தோனிக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படவில்லை.

- Advertisement -

இளம் வீரர் பாவம்

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” அந்த பையனுக்கு விதிக்கப்பட்ட தடை நான் கொஞ்சம் அதிகமானது மற்றும் தவறானது என்று நினைக்கிறேன். அவர் இப்பொழுதுதான் ஐபிஎல் விளையாடுவதற்கு இளம் வீரராக உள்ளே வந்திருக்கிறார். இதற்கு முன்பு பார்த்தால் தோனி களத்திற்குள் புகுந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனால் தோனிக்கு இவர்கள் எந்தவித தடையும் விதிக்கவில்லை என்பது முக்கியமானது”

இதையும் படிங்க : கேப்டன் கில்லுக்காக பிசிசிஐ சிறப்பு ஏற்பாடுகள்.. அணி மாற்றம் மற்றும் பழைய கோச் வருகை – வெளியான செய்திகள்

“இதேபோல விராட் கோலியும் நடுவர்களிடம் தோனி போலவே பேசி நடந்து கொண்டிருக்கிறார். அவர் பலமுறை இப்படி செய்தும் கூட அவருக்கு எதுவும் தடை விதிக்கப்படவில்லை. இந்த இளம் வீரருக்கு தடை விதிக்காமல் அவரை விடுவித்து இருந்திருக்கலாம். அவரைத் தொடர்ந்து விளையாட அனுமதித்திருக்கலாம். ஆனால் பெரிய வீரர்களுக்கு ஒரு மாதிரியும் சிறிய வீரர்களுக்கு ஒரு மாதிரியும் செயல்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -