2008 முதல் ஐபிஎல்.. நான் சொந்த டெல்லிக்கு கோலியை வாங்காத காரணம் இதுதான் – சேவாக் வெளியிட்ட தகவல்

0
562
Sehwag

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடருக்கு விராட் கோலியை அவருடைய சொந்த அணியான டெல்லி டேர் டெவில்சுக்கு வாங்காதது ஏன் என அப்போதைய கேப்டன் வீரேந்தர் சேவாக் காரணத்தை கூறியிருக்கிறார்.

ஐபிஎல் முதல் சீசனில் 2008 ஆம் ஆண்டு 12 லட்சம் ரூபாய்க்கு ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது இருந்து இப்போது வரையில் 18 வருடங்களாக ஒரே அணிக்கு விளையாடி வரும் ஒரே வீரராக விராட் கோலி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நம்ப முடியாத ஆச்சரியம்

முதல் ஐபிஎல் சீசன் நடைபெற்ற ஆண்டில் விராட் கோலி தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணி உலக கோப்பையை வென்றிருந்தது. இதன் காரணமாக அந்த ஆண்டு பலரும் விராட் கோலி என்கின்ற சிறுவன் யார் என தேடத் தொடங்கி இருந்தார்கள். அவர் அணியை வழிநடத்திய விதமும் பேட்டிங்கில் செயல்பட்ட விதமும் பலரையும் கவர்ந்திருந்தது.

மேலும் முதல் ஐபிஎல் சீசன் என்பதால் நீங்கள் ஏலத்திற்கு வராமலே 16 வீரர்களை அணிக்காக பதிவு செய்து கொள்ள முடியும். எனவே நிச்சயமாக விராட் கோலி டெல்லி டேர் டெவில்ஸ் அணி நிர்வாகம் பதிவு செய்து தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி வீரரான தான் வடெல்லி அணிக்குதான் விளையாடுவேன் என்று விராட் கோலியின் நம்பி இருந்த பொழுதுதான், யாரும் நம்ப முடியாத வகையில் டெல்லி அணி நிர்வாகம் அவரை கழட்டிவிட்டது.

- Advertisement -

உண்மை காரணம் என்ன?

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அப்போது டெல்லி டேர் டெவில்சாக இருந்த அணியின் கேப்டனான வீரேந்தர் சேவாக் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனுக்கு டெல்லி அணிக்கு ஏன் விராட் கோலியை வாங்கவில்லை என்பது குறித்தான உண்மை காரணத்தை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : மக்கள் இந்த விஷயத்தை மறந்துடறிங்க.. ஆனா நான் டிகே கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன் – விராட் கோலி பேச்சு

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” 2008 ஆம் ஆண்டு எங்களிடம் நிறைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். கௌதம் கம்பீர், ஷிகர் தவான் மற்றும் தில்சன் போன்றவர்கள் இருந்தார்கள். மேலும் அப்பொழுது எங்களிடம் ஏபி டிவில்லியர்ஸ் இருந்தார். எனவே எங்களுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட் கோலி தேவைப்படவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்கு பந்துவீச்சாளர்தான் தேவைப்பட்டார். எனவே நாங்கள் பிரதீப் சங்வானை தேர்ந்தெடுத்தோம். மேலும் அந்த ஆண்டு நாங்கள் தேர்ந்தெடுத்த பந்துவீச்சாளர்கள் பிரதீப் சங்வான் மற்றும் யோமகேஷ் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -