நேற்று டெல்லி அணிக்கு எதிராக குர்னால் பாண்டியா உடன் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்த விராட் கோலி ஒரு முக்கிய விஷயத்தை மக்கள் மறந்து விடுவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த போட்டியில் 162 ரன்களை துரத்திய ஆர்சிபி அணி 26 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. மேலும் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்தது. எனவே ஆர்சிபி அணி தோல்வி அடைவது உறுதி என நம்பப்பட்டது. இந்த இடத்திலிருந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய காரணமாக இருந்து விராட் கோலி அணியை வெற்றி பெற வைத்தார்.
மக்கள் இதை மறந்துடறாங்க
மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நிறைய பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்களுக்கே போட்டி மிகவும் சலிப்பை கொடுக்க ஆரம்பித்தது. பிறகு பாதி ஐபிஎல் தொடர் தாண்டி ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் படி கொடுக்கப்பட்டன. இந்த ஆண்டு பிசிசிஐ சுதாரித்துக் கொண்டு ஆரம்பம் முதலே நல்ல ஆடுகளங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
இதுகுறித்து பேசி உள்ள விராட் கோலி “சிங்கிள்ஸ் மற்றும் டபுள் எடுப்பதை நான் நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறேன். டி20 கிரிக்கெட் வடிவத்திலும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்து முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடுவது பாதுகாப்பான வழியில்லை என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். நீங்கள் ஷாட்களுக்கு செல்வதற்கு முன்னால் கொஞ்சம் நேரத்தையும் செலவிட வேண்டும்”
எங்கள் அணியிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன்
“மேலும் இந்த ஆண்டு எங்களை எடுத்துக் கொண்டால் எங்களிடம் நிறைய சக்தி வாய்ந்த பேட்டர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களால் பத்து பந்தில் 5 சிக்ஸர்கள் கூட அடிக்க முடியும். எங்களிடம் டிம் டேவிட் இருக்கிறார். மேலும் அவருடன் தற்பொழுது ரொமாரியோ செப்பர்ட் இருக்கிறார். எனவே ஹிட்டர்களுக்கு பிரச்சனை இல்லை”
இதையும் படிங்க : அடப்பாவிங்களா..எங்க நடராஜன இதனாலதான் ஆட வைக்கலையா.. சிக்கிய பீட்டர்சன்.. ரசிகர்கள் கோபம்
“இந்த விக்கெட்டை பார்த்தால் நாங்கள் பெற்றுள்ள வெற்றி மிகவும் கடினமானது. ஏனென்றால் இங்கு வழக்கமாக இருக்கும் ஆடுகளத்தை விட இந்த ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதே சமயத்தில் நாங்கள் ரன்னை துரத்திக் கொண்டிருந்த பொழுது,நாங்கள் சரியான முறையில் ஆடி சரியான இடத்தில் போட்டியை வைத்திருக்கிறோமா என்று, எங்களுடைய டக் அவுட்டில் கேட்டுக்கொண்டே இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.






