ஐபிஎல் 2025

எனக்கு பஞ்சாப் ஜெயிக்கணும்.. ஆனா அதுக்கு ஆர்சிபி ஜெயிக்கணும்.. புரியலையா ரகசியம் இதுதான் – சேவாக் விருப்பம்

நடப்பு ஐபிஎல் தொடரில் தனக்கு ஆர்சிபி அணி ஜெயிக்க வேண்டும் எனவும் ஆனால் அதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணம் இருப்பதாகவும் வீரேந்தர் சேவாக் நகைச்சுவையாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

மூன்றுக்கு இரண்டு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் இதுவரையில் மூன்று போட்டிகளில் நேரடியாக மோதி கொண்டிருக்கின்றன. இதில் பெங்களூரில் வைத்து பஞ்சாப் அணி ஆர்சிபி அணியை வென்றது. இதற்கு அடுத்து ஆர்சிபி அணி பஞ்சாபில் வைத்து இரண்டு முறை பஞ்சாப் அணியை வென்றிருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த மோதலில் தற்போது கணிப்புப்படி ஆர்சிபி அணியின் கையே ஓங்கி இருக்கிறது. அவர்களது பவுலிங் யூனிட் பஞ்சாப் பவுலிங் யூனிட்டை விட வலிமையாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கிறது.

- Advertisement -

சேவாக் சுவாரசிய கருத்து

இந்த நிலையில் இறுதி போட்டிகள் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பேசி உள்ள வீரேந்தர் சேவாக் “இது ஆர்சிபி எனக்காக வெற்றி பெறும் நாள். நான் முதல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆதரித்தேன் தோற்று விட்டார்கள். அடுத்து குஜராத்தை ஆதரித்தேன் அவர்கள் மும்பை இடம் தோற்று விட்டார்கள். இதற்கு அடுத்து இரண்டாவது தகுதி சுற்றில் மும்பையை ஆதரித்தேன் அவர்கள் பஞ்சாபிடம் தோற்று விட்டார்கள். நான் யாரை ஆதரித்தாலும் அவர்கள் தோற்று விடுவார்கள். அதனால் ஆர்சிபியை ஆதரிக்கிறேன்”

இதையும் படிங்க : 2025 ஐபிஎல் பைனல்.. வானிலை அறிக்கை மற்றும் கூடுதல் நேரம்.. ரசிகர்கள் கவலை.. போட்டி நடக்குமா?

“இப்படி எனக்கு வினோதமாக நடப்பது ஐபிஎல் தொடரில் மட்டும் கிடையாது. இந்திய அணி விளையாடும் போட்டிகளிலும் இப்படித்தான் எனக்கு நடக்கும். நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணியை ஆதரிக்கிறேன் அப்பொழுதெல்லாம் இந்திய அணி தோல்வி அடைந்து விடும்” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts