இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. ஆனால் வானிலை அறிக்கை ரசிகர்களுக்கு கவலை தருவதாக அமைந்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி தற்போது இறுதிப் போட்டிக்கு வந்திருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் ஆர்சிபி அணி இரண்டு முறை வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களுக்கு இறுதி போட்டியில் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆடுகளத்தை மாற்றிய வானிலை
இதே மைதானத்தில் நேற்று முன்தினம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டி மழையின் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஆடுகளம் நீண்ட நேரம் மூடி வைக்கப்பட்டு இருந்ததால் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இரண்டாவது பந்து வீசும் போது அப்படி இல்லை.
தற்போது இதே மைதானத்தில் இன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் நிலையில் வானிலை மீண்டும் அச்சுறுத்தல் தருவதாகவே அமைந்திருக்கிறது. இன்றைய நாளுக்கான குஜராத் அகமதாபாத் மைதானத்தின் வானிலை அறிக்கை ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது.
வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?
குஜராத் அகமதாபாத் மைதானத்தை சுற்றியும் பகலில் மழை வருவதற்கான வாய்ப்புகள் 66% இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் மாலை நேரத்தில் இது ஆறு சதவீதமாக குறையும் என்றும் கூறப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நேரத்தில் மழை அச்சுறுத்தல் இருக்காது என்று தெரிகிறது. அதே சமயத்தில் வானம் 60% மேகமூட்டத்துடன் போட்டி நடைபெறும் போது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : மும்பை கிட்ட ஜெயிச்சோம் ஆனா திருப்தி அடையல.. என்னோட பிளான் இப்படித்தான் உருவாகுது – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
மேலும் இந்த இறுதிப் போட்டிக்கு நாளை ரிசர்வ் நாளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டி நேரத்தில் இருந்து வழங்கப்படும் ஒரு மணி நேர கூடுதல் நேரத்திற்கு பதிலாக இரண்டு மணி நேரம் கூடுதலாக இந்த போட்டிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இன்று இறுதிப் போட்டியை முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கைகள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






