கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் முகமது ஷமி.. இனி இந்திய அணியில் இடமில்லையா? தேர்வாளர்களின் புதிய திட்டம் குறித்து வெளியான தகவல்

இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறாத ஷமி, தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

காயத்திலிருந்து மீண்ட பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியையும் ஃபார்மையும் நிரூபிக்க ஷமி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் இந்திய தேர்வாளர்கள் தற்போது அடுத்த சில ஆண்டுகளை மனதில் வைத்து புதிய வேகப்பந்துவீச்சு குழுவை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஷமியின் கம்பேக் வாய்ப்பு குறித்த சந்தேகம் அதிகரித்துள்ளது.

எதிர்காலத்திற்காக 15 வேகப்பந்துவீச்சாளர்கள் மீது கவனம்

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு 15 வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வுக்குழு அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயார்படுத்துவதே இந்திய அணியின் திட்டமாக கூறப்படுகிறது. முக்கியமாக, இந்த எதிர்கால திட்டத்தில் முகமது ஷமி இடம்பெறவில்லை என்பதுதான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா இந்திய வேகப்பந்துவீச்சின் முக்கிய வீரராக தொடரும் நிலையில், அவருடன் அடுத்த தலைமுறை பவுலர்களையும் வளர்க்க தேர்வாளர்கள் விரும்புவதாக தெரிகிறது. குறிப்பாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நீண்ட காலம் அணிக்கு பயன்படக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களை இப்போதே தயார்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

- Advertisement -

ஷமிக்கான இந்திய அணி கதவு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக தேர்வுக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காததும், எதிர்கால திட்டத்தில் அவரது பெயர் இல்லாததும் ஷமியின் கம்பேக் குறித்த கேள்விகளை அதிகரித்துள்ளது. இந்தியாவின் பல முக்கிய வெற்றிகளில் பங்காற்றிய ஷமி மீண்டும் இந்திய ஜெர்சியில் களமிறங்குவாரா என்பதை வரும் தொடர்கள்தான் தீர்மானிக்கும்.

- Advertisement -
Published by

Recent Posts