125 கோடி பரிசுத்தொகை.. இவர் மட்டும் பாவம் இல்லையா?.. சமமா எல்லாருக்கும் பிரிச்சு கொடுங்க – சேவாக் வேண்டுகோள்

0
3448
Sehwag

நேற்று டி20 உலகக் கோப்பையை வென்று வந்த இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்த 125 கோடி ரூபாய் மெகா பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இதே போலான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இன்னொரு அமைப்புக்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

இதுவரையிலான உலக கிரிக்கெட் நிகழ்வுகளில் எந்த ஒரு கிரிக்கெட் வாரியமும் இவ்வளவு பரிசுத்தொகையை அறிவித்தது கிடையாது. மேலும் ஐசிசி அமைப்பும் கூட தாங்கள் நடத்தும் உலகக் கோப்பை தொடர்களுக்கு இவ்வளவு பரிசுத் தொகையை நினைத்து பார்த்தது கூட கிடையாது.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்திருப்பதன் மூலமாக, உலக கிரிக்கெட்டில் தங்களுடைய பலம் என்னவென்று மற்ற எல்லோருக்கும் காட்டி இருக்கிறது. இப்படியான நிலையில் சிறப்பான ஒரு அணியை தேர்ந்தெடுத்ததற்காக தேர்வுக்குழுவில் உள்ள ஐந்து பேருக்கும் சமமான பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் என வீரேந்தர் சேவாக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “இந்தியத் தேர்வுக்குழு என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அஜித் அகர்க்கர் எப்பொழுதும் சொந்தமாக ஒரு அணியை உருவாக்குகிறேன் என்று கூறுவதில்லை. அவருக்கு மீதம் இருக்கும் நான்கு தேர்வாளர்களும் தங்களுடைய யோசனைகளைக் கூறுகிறார்கள். அவர்களுக்கும் நல்லவிதமான சிந்தனை இருக்கிறது. அவர்களுக்கும் இதில் பெரிய பங்கு உண்டு. ஏனென்றால் ஐந்து தேர்வாளர்களில் மூவர் ஒப்புக்கொண்டால்தான் ஒரு வீரரை தேர்வு செய்ய முடியும்.

அஜித் அவர்கள்தான் மட்டுமே அணியை தேர்வு செய்வதாக சொல்வதில்லை. மற்ற நால்வரும் அவருடன் சேர்ந்து உடன்படுகிறார்கள். எனவே இவர்கள் அனைவரும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைக்கு 150 முதல் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் போதும் என்பதை புரிந்து, அதற்கேற்றபடி ஒரு அணியை தேர்வு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : இவர் இந்தியாவுக்கு ஆடுவது எங்கள் அதிர்ஷ்டம்.. தோக்குற சூழ்நிலையில கூட ஆட்டத்தை மாத்துறாரு- கோலி பேட்டி

குறிப்பாக 120 முதல் 150 ஸ்டிரைக் ரேட் கூட வெற்றி பெறுவதற்கு சரியாக இருக்கிறது. இவர்கள் இதற்கான அணியைத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் அனைத்து தேர்வாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அஜித் அகர்கர், ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலீல் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் சரத் இவர்கள் அனைவரும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வீரர்கள் பெரும் போனஸ் மற்றும் பாராட்டுக்கள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.