அபிஷேக் ஷர்மா ரேர் பீஸ்.. இந்த பையன எனக்கே ஆச்சரியமா இருக்கு.. இதான் பிளஸ் பாயிண்ட் – சேவாக் பாராட்டு

0
121
Sehwag

இந்திய முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் தற்போதைய இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவை அறிய வீரர் என பாராட்டி இருக்கிறார்.

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 13 பந்துகளை மட்டும் சந்தித்த அபிஷேக் சர்மா அதிரடியான இரண்டு சிக்ஸர்கள் விளாசி 31 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருடைய தற்போதைய சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட் 193 என பிரம்மாண்டமானதாக இருக்கிறது.

- Advertisement -

அவர் செய்வது அரிதானது

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “அவர் பேட்டிங் செய்யும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை பார்ப்பது மிகவும் அரிதானது. இன்று அவர் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். அவருடைய மொத்த ஸ்ட்ரைக் ரேட் 193 என இருக்கிறது. புதிய பந்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை பார்ப்பது அரிதானது. ஏனென்றால் எல்லோரும் செட்டில் ஆகி பழைய பந்தில் அடிக்கவே விரும்புகிறார்கள்”

“வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக புதிய பந்தில் விருப்பப்பட்டபடி பவுண்டரி சிக்சர் அடிப்பதற்கு கடினம். இருப்பினும் அபிஷேக் ஷர்மா அதற்கு விதிவிலக்காக விளையாடுகிறார். அவர் மைதானத்திற்கு வந்ததும் பந்துவீச்சாளர்கள் எங்கே வீசுவது என பயப்படுகிறார்கள். அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்”

- Advertisement -

இதுதான் அழகான விஷயம்

“கடந்த போட்டியிலும் அபிஷேக் ஷர்மா இதைத்தான் செய்தார். அவர் முதல் பந்திலேயே இறங்கி விளையாடி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தனது கால்களை பயன்படுத்தி விளையாடினார். பிறகு ஃபுல் பந்துக்காக காத்திருந்தார். பிறகு அதை பெரிய ஷாட்டாக விளையாடினார். அபிஷேக் சர்மாவின் அழகான விஷயம் என்னவென்றால் அவர் தனது வடிவத்தை தொடர்கிறார்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியை பார்க்க பரிதாபமா இருக்கு.. இந்திய வீரர்களை பார்த்தும் இதுல திருந்தல – அஸ்வின் விமர்சனம்

” அவர் ஆப் சைடில் அருமையாக விளையாடுகிறார். நீங்கள் இந்த பக்கத்தில் சிறப்பாக விளையாடினால் பந்துவீச்சாளர்கள் உங்களிடம் நேராக பந்து வீச வருவார்கள். அப்படி வரும்பொழுதும் அபிஷேக் சர்மா லெக் சைடில் சிறப்பாக அடிக்கிறார். எங்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு ஒரு ஹிட்டர் கிடைத்திருக்கிறார். அவர் நம்ப முடியாத நிலை தன்மை உடன் அடித்தார்” என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -