தற்போது பாகிஸ்தான் அணி விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருப்பதாகவும், அவர்களுக்கு நல்ல கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
நேற்று இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 127 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் 61 ரன் கொடுத்தது. மேலும் இந்திய அணி மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 16வது ஓவரில் வெற்றி பெற்றது.
பரிதாபமாய் இருக்கிறது
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” பாகிஸ்தான் அணி விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. அவர்கள் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடி பழக்கப்படவில்லை. ஐபிஎல் போன்று அவர்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை”
“நேற்று ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்தை அபிஷேக் சர்மா இறங்கி வந்து அடித்தார். முகமத் நவாஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை திலக் வருமா ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடினார். இப்படி எல்லாம் செய்வார்கள் என்பது குறித்து அவர்களுக்கு எந்தவித ஐடியாவும் இல்லை. அவர்கள் அவுட்டேட்டட் டி20 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்”
ஷாகின் உணரவே இல்லை
“நேற்று ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவரும் வேகமாக மேலே வீசும் பொழுது அடி வாங்கினார்கள். அதுவே ஆடுகளத்தை பயன்படுத்தி மெதுவாகவும் கட்டர்கள் வீசும் பொழுதும் சிறப்பாக இருந்தார்கள். ஆனால் ஷாகின் அப்ரிடி இந்திய வீரர்களை பார்த்து தன்னை திருத்திக் கொள்ளவில்லை. ஆடுகளம் மற்றும் எதிரணி குறித்து அவர்கள் சரியாக மதிப்பிடவில்லை”
இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு எதிரா ஆட இந்திய வீரர்கள் விரும்பல.. வற்புறுத்தினாங்க சூர்யாகிட்ட கேளுங்க – சுரேஷ் ரெய்னா பேச்சு
“நிறைய அனுபவம் இருக்கும் ஷாகின் தொடர்ந்து பந்தை மேலே வேகமாக வீசி அபிஷேக் ஷர்மாவிடம் அடி வாங்கினார். ஆடுகளத்தை பயன்படுத்தி மெதுவாக வீச வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும் பொழுது பாகிஸ்தான் அணி பரிதாபமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






