இந்திய கிரிக்கெட்

கோயங்கா அவர்களே.. ரிஷப் பண்டிற்கு அந்த தப்பை பண்ணிடாதீங்க.. உங்க டீம் நாசமாயிடும் – சேவாக் எச்சரிக்கை

தற்போது ரிஷப் லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை அடுத்த ஆண்டு தொடர்ந்து லக்னோ அணி நிர்வாகம் தக்க வைக்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டுக்கு முன் ஐபிஎல் மெகா ஏலத்தின் மிக அதிகபட்ச தொகையான 26 கோடி ரூபாய்க்கு லக்னோ பணி நிர்வாகம் ரிஷப் பண்டை வாங்கி கேப்டன் ஆகவும் நியமித்தது. தற்போது அந்த அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் சரிவு

ரிஷப் பண்ட் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக உருவாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு அவருடைய ஐபிஎல் ஆரம்ப காலம் அமைந்திருந்தது. ஆனால் அதற்குப் பிறகு இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார்.

மேலும் மிக முக்கியமாக டி20 கிரிக்கெட்டில் அவரால் சரளமாக அதிரடியில் ஈடுபட முடியவில்லை. அவர் விக்கெட்டை எந்த நேரத்திலும் இழந்து விடக் கூடியவராக இருப்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மேலும் களத்தில் கேப்டனாகவும் அவரது முடிவுகள் பெரிய அளவில் பலன் கொடுப்பதில்லை. எனவே அவரை அடுத்த ஆண்டு லக்னோ அணி நிர்வாகம் கழட்டி விடலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த தவறை செய்ய வேண்டாம்

இந்த நிலையில் இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் போது ” லக்னோ அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை கழட்டி விடும் தவறை செய்யக்கூடாது. ஒருவேளை நீங்கள் அவரை கழட்டி விட்டு ஏலத்திற்கு அனுப்பி குறைந்த தொகைக்கு மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கலாம். அதன் மூலமாக பணம் கொஞ்சம் மீதியாகவே செய்யும். இது நல்ல யோசனைப் போலவே தோன்றும்”

இதையும் படிங்க : உண்மை தெரியாதா?.. தம்பிகளா இந்த பேப்பரை தூக்கி காட்டுற வேலையை நிறுத்துங்க.. சத்தியமா செம சலிப்பா இருக்கு – டேல் ஸ்டெய்ன் வலியுறுத்தல்

“ஆனால் அப்படி குறைந்த தொகைக்கு நீங்கள் அவரை மீண்டும் வாங்கினால் அணி நிர்வாகத்திற்கும் அவருக்குமான உறவு பாதித்துவிடும். நிச்சயம் ஒரு வீரர் இதனால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். பிறகு அவர் அடுத்த சீசனிலும் உங்களுக்கு மோசமாக விளையாட வாய்ப்பு உருவாகிவிடும். இதனால் லக்னோ அணி பெரிய பிரச்சனைகளை சந்திக்கும்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -
Published by