நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 24 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணியின் வீரர் கேஎல் ராகுல் அதிரடியாகவும், நேர்த்தியாகவும் விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கேஎல் ராகுலின் புதிய செயல் திறன்
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் நான்கிலும் வெற்றி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தற்போது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
அணிக்கு தேவைப்படும் நேரத்தில் தொடக்க ஆட்டக்காரராகவும், அதே நேரத்தில் மிடில் வரிசை வீரராகவும் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேஎல் ராகுல் குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் உண்மையான தன்மையை தற்போது கேஎல் ராகுல் புரிந்து கொண்டதாக சேவாக் சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.
வீரேந்திர சேவாக் கருத்து
இதுகுறித்து வீரேந்திர சேவாக் விரிவாக கூறும்போது “கேஎல் ராகுல் இதற்கு முன்பு ஒருபோதும் மோசமான வீரர் கிடையாது. ஐபிஎல்லில் ஸ்டிரைக் ரேட் முக்கியம் இல்லை என்று சொல்லி தன்னைத்தானே கேஎல் ராகுல் குழப்பிக் கொள்வார். ஒவ்வொரு போட்டியிலும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் இல்லை என்பது தெரியும், ஆனால் அணி வெற்றி பெற வேண்டும் அதுவே முக்கியம். அவர் தனது அணிகளை வெற்றிகளுக்கு அழைத்துச் செல்லாமல் இடையில் விட்டு விடுவார். கடந்த காலங்களில் அவர் தனது வேலையை முடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது போட்டியில் வெற்றி பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே கூட முகேஷ் குமார் பண்ண பைத்தியக்காரத்தனம்.. எனக்கு கோபம் ஆயிடுச்சு – குல்தீப் யாதவ் பேட்டி
கடந்த காலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நான் இருந்தபோது கேஎல் ராகுல் அதில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் போட்டிகளில் அவரை முழுவதுமாக வெளிப்படுத்துமாறு சொன்னேன். குறிப்பாக நாங்கள் அவருக்கு போட்டிகளில் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காமல் முழு சுதந்திரம் கொடுத்தோம். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் வீரராக மாறுவார் என்று எனக்கு நன்றாக தெரியும்” என்று ஷேவாக் பேசியிருக்கிறார். கடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் 93 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.






