ஆர்சிபி அணிக்கு விராட் கோலி வீரராக மட்டும் இல்லாமல் மென்டராகவும் இருக்கிறார் எனவும் அவரை ஆர் சி பி கேப்டன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார். மேலும் நேற்று களத்தில் எவ்வாறு ஆர்சிபி கேப்டனுக்கு உதவியாக இருந்தார் என்றும் தெரியப்படுத்தி இருக்கிறார்.
நேற்று பதினெட்டாவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து கேகேஆர் அணியை ஆர்சிபி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 230 ரன்கள் கேகேஆர் அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னுக்கு ஆர்சிபி கட்டுப்படுத்தி அசத்தியது.
விராட் கோலியின் பங்களிப்பு
நேற்றைய போட்டியில் ஆர்சிபி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட் அதிரடியாக ஆரம்பித்து அரைசதம் அடித்தார். இப்படியான நிலையில் ஒரு முனையில் விராட் கோலி பொறுமையாக விளையாடுவதற்கு நினைக்கவில்லை. மாறாக பில் சால்ட்டுக்கு சமமாக அவரும் அதிரடியில் ஈடுபட்டார். மேலும் மிகவும் விரைவாக அரை சதம் அடித்து போட்டியில் இருந்து கேகேஆர் அணியை ஒட்டுமொத்தமாக வெளியில் தள்ளிவிட்டார்.
இதேபோல் குயின்டன் டி காக் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை சுயாஸ் சர்மா எடுத்ததும் தவறவிட்டார். இருந்த போதும் ஜோஸ் ஹேஸில்வுட் உண்டு உடனடியாக மீண்டும் அவரை வெளியேற்றி ஆர்சிபி அணிக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதுகுறித்து வீரேந்திர சேவாக் மிக முக்கியமான ரகசிய விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.
ஐடியா கொடுத்தது விராட் கோலி
நேற்றைய போட்டியில் கிடைத்த முதல் வாய்ப்பை ஆர்சிபி அணி கோட்டை விட்ட காரணத்தினால் தொடர்ந்து ஆர்சிபி அணி சொதப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் மிக வேகமாக மீண்டும் பந்துவீச்சில் திரும்பி வந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலாக வெற்றி பெற்றார்கள். இதில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி தந்த ஐடியா முக்கிய காரணமாக இருந்தது என வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அர்த்தமில்லாம பேசாதிங்க.. சிஎஸ்கேவ மும்பை ஜெயிக்கவே முடியாது.. காரணம் இதான் – சித்து கருத்து
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “விராட் கோலி ஒரு கிங் மேலும் அந்த அணியின் மென்டராகவும் இருக்கிறார். எனவே ஆர்சிபி கேப்டன் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் குயிண்டனுக்கு எதிராகவும் நிறைய விளையாடியிருக்கிறார். குயிண்டனின் பலவீனம் விராட் கோலிக்கு மிகவும் நன்றாக தெரியும். அவர் ஆர்சிபி கேப்டனுக்கு களத்தில் அதை அழைத்து தெரிவித்தார். உடனடியாக அந்த செய்தி பந்துவீச்சாளருக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே விக்கெட்டும் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.






