அர்த்தமில்லாம பேசாதிங்க.. சிஎஸ்கேவ மும்பை ஜெயிக்கவே முடியாது.. காரணம் இதான் – சித்து கருத்து

0
344
Sidhu

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியாது என இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் 18ஆவது சீசனில் விடுமுறை நாளான இன்று மிக முக்கியமான போட்டியாக சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மற்ற அணிகளின் ரசிகர்களும் காத்திருக்கும் அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.

- Advertisement -

புதிய கேப்டன்களுடன் புதிய களம்

சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி என்றால் களத்தில் தோனி மற்றும் ரோஹித் சர்மா மோதிக் கொள்ளும் போட்டியாக அமையும். இந்த முறை சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் இருவரும் நிற்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் மெதுவான பந்துவீச்சுக்காக ஒரு போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் இன்று அவர் விளையாடவில்லை. மேலும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தின் காரணமாக விளையாடவில்லை. எனவே இது அந்த அணியை மிகக் கடுமையாக பாதிக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

மும்பை சிஎஸ்கேவை வெல்ல முடியாது

இன்றைய மோதலில் யார் வெல்லுவார்கள் என்பது குறித்தான கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து இது அர்த்தமில்லாத கேள்வி எனவும், மும்பை இந்தியன்ஸ் அணியால் தற்போது சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து வெல்வது சாத்தியம் இல்லாதது என அதிரடியாக பதில் அளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க : சக்கர நாற்காலியில் இருந்தாலும் சிஎஸ்கே என்னை விடாது.. என் ஓய்வு அப்பொழுதுதான் – தோனி பேச்சு

இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது “சிஎஸ்கே அணிக்கு சென்னை சேப்பாக்கம் என்பது அவர்களுடைய கோட்டையாக மாறிவிட்டது. நீங்கள் அவர்களுடைய கோட்டையில் வைத்து அவர்களை வெல்வது என்பது மிக மிகக் கடினமான காரியம். தற்போது மும்பை இந்தியன் சனியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா என இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாது இருக்கிறார்கள். இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்று கேட்பது அர்த்தமில்லாதது. சிஎஸ்கே எல்லா வழிகளிலும் சென்று வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -