ஷாகிப் நீங்க ஹைடன் கிடையாது பங்களாதேஷ் பிளேயர்தான்.. இதுக்கு வெட்கமா இல்லையா? – சேவாக் கருத்து

0
982
Sehwag

நேற்று டி20 உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணி சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்கா அணியை 113 ரன்களில் சுருட்டியது. ஆனால் ரன் துரத்தலில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மூத்த வீரர் ஷாகிப் அல் ஹசன்பேட்டிங் செயல்பாடு மோசமாக இருந்தது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பங்களாதேஷ் கிரிக்கெட்டில் நடுவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓரளவுக்கு பேட்ஸ்மேன்கள் நன்றாக இருந்தார்கள். அவர்களிடம் நல்ல வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே எதிராக இருக்கிறது. இப்பொழுது நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்க நல்ல பேட்ஸ்மேன்கள் கிடைக்க கிடைக்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் தேவை இருப்பதாக அவரை டி20 உலகக் கோப்பை பங்களாதேஷ் அணியில் தேர்வு செய்தார்கள். அவர் இதுவரையில் எந்த ஒரு தாக்கத்தையும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களாதேஷ் அணிக்கு வெளிப்படுத்தவில்லை. நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேக பந்துவீச்சாளர் அன்ட்ரிச் நோர்க்கியா ஓவரில் புல் ஷாட் அடிக்கப்போய் சாதாரணமாக மூன்று ரன்னில் ஆட்டம் இழந்தார். பங்களாதேஷ் அணி 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “ஷாகிப்பை அணியில் அனுபவத்திற்காக சேர்த்தார்கள் என்றால், அப்படிப்பட்ட அனுபவத்தை அவரிடம் இருந்து பார்க்கவில்லை. குறைந்தபட்சம் இந்த நியூயார்க் விக்கெட்டில் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். நீங்கள் ஒரு வேகமான பந்தை புல் ஷாட் ஆடுவதற்கு ஹைடன், கில்கிறிஸ்ட் கிடையாது. நீங்கள் பங்களாதேஷ் வீரர். உங்களால் ஹூக் மற்றும் புல் ஷாட் அடிக்க முடியாது. தெரிந்த ஷாட்டை மட்டும் விளையாடுங்கள்.

இதையும் படிங்க : கோலி கிடையாது.. இவர் தான் இந்திய அணியின் சிறந்த வீரர்.. மீடியாக்கள் திருந்துங்க – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

- Advertisement -

ஷாகிப்புக்கு கடந்த டி20 உலகக் கோப்பையே மிக அதிகமான ஒன்று. அவர் நீண்ட காலமாக விளையாடுகிறார். 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் மற்றும மோர்கல், மேலும் ஆப்கானிஸ்தானில் ஒரு இடதுகை பந்துவீச்சாளர் ஆகியோரை என்னால் விளையாட முடியவில்லை. நான் உடனே இந்திய தேர்வாளர்களிடம் என்னை டி20 இந்திய அணியில் சேர்க்க யோசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவருடைய டி20 உலகக்கோப்பை எண்கள் மோசமாக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும். நம்முடைய நிலைமை நமக்குத்தான் தெரியும். எனவே ஷாகிப் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.