இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த வீரேந்திர சேவாக் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை தான் ஏற்க விரும்பவில்லை எனவும் அதற்கான காரணத்தையும் சேவாக் கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஃபார்முலாவை ஆரம்பித்தவர் வீரேந்திர சேவாக் என்றால் அது மிகையாகாது. தான் களமிறங்கும் அனைத்து போட்டிகளிலும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். ஒரு சில தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் தலைமை வகித்து அதிரடியான ஆட்டமுறையை இந்திய அணிக்கு புகுத்தி இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற சேவாக், 2016ம் ஆண்டு பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்பட்டு அதற்குப் பிறகு இயக்குனராகவும் பொறுப்பேற்றார். மேலும் 2018ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்தார். 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அந்தப் பதவிக்கு ஷேவாக் விண்ணப்பிக்க விரும்பவில்லை.
இதற்கான காரணம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷேவாக் கூறும்போது “இந்திய அணிக்கு அல்ல, ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக யாராவது என்னை அணுகினால் நிச்சயம் அது குறித்து யோசிப்பேன். ஏனென்றால் இந்திய அணியின் பயிற்சியாளராக நான் இருந்தால் கடந்த 15 வருடங்களில் நான் செய்த வழக்கத்தை திரும்பவும் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்திய அணிக்காக விளையாடும் போது வருடத்திற்கு எட்டு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டும்.
இப்போது எனது இரு குழந்தைகளுக்கு 14 மற்றும் 16 வயதாகிறது. அவர்களும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஒருவர் ஆஃப் ஸ்பின்னர் மற்றும் மற்றொருவர் தொடக்க பேட்ஸ்மேன். எனவே நான் அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். அவர்களுடன் நான் நேரத்தை செலவழிக்க வேண்டும். நான் இந்திய அணியின் பயிற்சியாளராக திகழ்ந்தால் வருடத்திற்கு எட்டு மாதங்கள் வெளியே இருக்க நேரிடுவதால் அது எனக்கு சவாலாக அமையும்.
இதையும் படிங்க:முதல் முறை.. ஆப்கான் கிரிக்கெட் நடத்தும் வரலாற்று தொடர்கள்.. தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் வருகை
அதற்குப் பின்னர் என் குழந்தைகளுக்கு நேரத்தை செலவழிக்க முடியாது. அதே நேரத்தில் ஐபிஎல்லில் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது குறித்து நான் யோசிப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்திய அடியின் பயிற்சியாளராக திகழ்ந்தால் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாது எனவும் ஐபிஎல் போன்ற குறுகிய தொடர் தனக்கு சிரமமின்றி இருப்பதாக ஷேவாக் இதன் மூலம் தெரிவித்து இருக்கிறார்.