நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி இந்திய அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு அதிக ஹைப் கொடுக்கக் கூடாது என வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்தும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியா அதிரடியாக 27 பந்தில் 50 ரன்கள் குவிக்க ஐந்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. பேட்டிங் செய்ய ஆடுகளம் சாதகமாக இருந்த பொழுதும் பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்ய முன்வரவில்லை.
இதற்கடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர் கலை முழுமையாக ஆடிய பொழுதும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சீனியர் வீரர்கள் பொறுப்பாக விளையாடவில்லை. இதை எடுத்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
பங்களாதேஷ் அணி குறித்து பேசிய வீரேந்தர் சேவாக் “அவர்கள் எங்களுடைய நாளை கெடுத்து விட்டார்கள். போட்டி தேவையில்லாமல் நீண்ட நேரம் நடந்தது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் இதே ரன்களைதான் எடுத்திருப்பார்கள். இந்தியா சீக்கிரத்தில் அதை துரத்தி வெற்றி பெற்றிருக்கும். நேரம் மிச்சமாகி இருக்கும். இது பங்களாதேஷ் அணிதான் இந்த அணிக்கு ஹைப்தேவையில்லை.
இன்று ஷாகிப் அல் ஹசன் நாள். அவர் பெரிய அணிக்கு எதிராக விளையாடினார். அவருடன் கேப்டன் சான்டோ இருந்தார். குறைந்தபட்சம் 15 முதல் 16 ஓவர்கள் வரை அவர் இருந்து ஒத்துழைப்பு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ஆட்டம் இழந்து வெளியேறினார். அவருக்கு நிறைய அனுபவம் இருந்த போதிலும் கூட அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதையும் படிங்க : வெறித்தன கோச்சிங்.. பவுண்டரி எல்லையில் பிராவோ செய்த காரியம்.. ரஷித் கானின் துணிச்சல் முடிவு
ஹர்திக் பாண்டியா சிறந்த பொழுதுபோக்கை தருகிறார். அதுவே அவரைப் பற்றிய சிறப்பு.அவர் அவசரமாக அடித்து விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. அவரிடம் நல்ல கிளீன் ஹிட் இருக்கிறது. 27 பந்தில் 50 ரன்கள் எடுக்கும் ஹர்திக் பாண்டியா தான் வேண்டும் 30 ரன்கள் எடுப்பவர் வேண்டாம். நாங்கள் இப்படிப்பட்ட ஹர்திக் பாண்டியாவைதான்” தவற விட்டோம் என்று கூறியிருக்கிறார்.






