நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில் இன்னும் அந்த பொறுப்புக்கு தயாராகவில்லை என வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இருந்த நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை கில் பயன்படுத்திய விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் சேவாக் அவரை கேப்டன் பொறுப்புக்கு இன்னும் தயாரானவராக காட்டவில்லை என்று கூறி விமர்சனம் செய்திருக்கிறார்.
கில் செய்த தவறு
தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் நேற்றைய போட்டியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரபாடா என மூன்று முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இவர்களுடன் நான்காவதாக பந்தை ஸ்விங் செய்யக்கூடிய அர்ஷத் கான் இருந்தார். இவர்களில் ரபாடா மட்டுமே கடைசிக்கட்ட ஓவர்களுக்கு சிறப்பாக இருக்கக்கூடியவர்.
இந்த நிலையில் பவர் பிளேவில் ரபாடாவை கில் மூன்று ஓவர்கள் பேசவைத்தார். மேலும் ஓரளவுக்கு நன்றாக சென்று கொண்டிருந்த சிராஜை பவர் பிளேவில் நிறுத்திவிட்டு அர்ஷத் கானை கொண்டு வந்து வீசவைத்து 21 ரன்கள் கொடுத்தார். பவர் பிளேவை பொறுத்த வரையில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஐந்து ஓவர்கள் வீசி இருக்க வேண்டும். ராபாடா கடைசி கட்ட ஓவர்களுக்கு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் வைத்த விமர்சனம்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “கில்லின் கேப்டன்சி சரியான உயரத்தில் இல்லை. அவர் இன்னும் கேப்டன் பொறுப்புக்கு தயாராகவும் இல்லை செயல்பட கூடியவராகவும் இல்லை. பவர் பிளவில் சிராஜ் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரை அப்படியே எடுத்துச் சென்று இருக்க வேண்டும். ஆனால் அவரை நிறுத்திவிட்டு அர்ஷத் கானை கொண்டு வந்தார். அந்த ஓவரில் 21 ரன் சென்றது. அதுதான் போட்டியையும் மாற்றியது”
இதையும் படிங்க : சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஷ்.. விராட் கோலி மீது பரவும் விமர்சனம்.. ரவி சாஸ்திரி உள்குத்து பேச்சு
“அந்த நேரத்தில் சிராஜை அப்படியே தொடர்ந்து பந்து வீச வைத்திருந்தால் இது நடந்திருக்காது. மேலும் அவரை அங்கே தடுத்து நிறுத்திவிட்டு இறுதியில் கொண்டு வந்து அவரையும் ரன்கள் கொடுக்க வைத்ததை நாம் பார்த்தோம். ஒரு கேப்டனுக்கு தன்னுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக இருந்தால் அவரை தொடர்ந்து எடுத்துச் செல்லும் நோக்கம் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






