இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி அணிகள் செய்ததை பின்பற்றாமல் கேகேஆர் கேப்டன் ரகானே தவறு செய்து ப்ளே அப் வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டார் என வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக கேகேஆர் அணி நிர்வாகம் கடந்த வருடத்தில் ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்காமல் வெளியில் விட்டது. இதன் காரணமாக ரகானேவை வாங்கி கேப்டனாக மாற்றியது.
தவறான முடிவால் பெரிய அடி
இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து வந்த கேப்டன் ரகானே 14 போட்டிகளில் மொத்தம் எடுத்த ரன்கள் 390 மட்டுமே. அதிக பந்துகளை விளையாட வாய்ப்பு இருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 450 ரன்கள் ஆவது மேல் வரிசையில் எடுத்தால்தான் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அணியில் தேவையான பேட்ஸ்மேன்கள் இருந்த பொழுதிலும் இளம் பேட்ஸ்மேன் மீது ஏலத்தில் முதலீடு செய்யாமல் வெங்கடேஷ் ஐயருக்கு 23 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய காரணத்தினால், அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை பலமானதாக அமைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இதெல்லாம் சேர்ந்து நடப்பு சாம்பியனுக்கு பெரிய சோகத்தை உண்டாக்கி விட்டது.
ரகானே அதிரடி பேட்ஸ்மேனா?
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “ஒரு அணிக்கு கேப்டனாக இருந்தால் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டுமென எங்கும் கொள்கையாக எழுதியெல்லாம் வைக்கப்படவில்லை. இதுவே நீங்கள் ரிஷப் பண்ட்டை பாருங்கள் அவர் தனக்கு முன்னால் தனது அணி வீரர்களை விளையாட அனுப்பி வைத்தார். ஏனென்றால் அவர்கள் நல்ல பார்மில் இருந்தார்கள். இதை லக்னோ அணியும் வாய்ப்பு பெற்ற வீரர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்”
இதையும் படிங்க : அவரோட கோச் நான் சொல்றேன்.. சாய் சுதர்சன் கிட்ட இங்கிலாந்துல ஆடற டெக்னிக் இல்ல – தமிழ்நாடு முன்னாள் கோச் பேட்டி
“இதை கேகேஆர் அணியும் செய்திருக்கலாம் இது அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் குழுவின் பொறுப்பாக இருக்கிறது. இதை எடுத்துக் கொள்ளும் பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக திடீரென பேட்டிங் வரிசையை மாற்றி சிவம் துபேவை முன்னால் அனுப்பினார்கள். இதற்கு முன்னால் அவரை பிரிவிஸ்க்கு பின்னால் அனுப்பினார்கள். இதைப்போல் ரகானே எதையும் செய்யவில்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






