அவரோட கோச் நான் சொல்றேன்.. சாய் சுதர்சன் கிட்ட இங்கிலாந்துல ஆடற டெக்னிக் இல்ல – தமிழ்நாடு முன்னாள் கோச் பேட்டி

0
585
Sai

தமிழ்நாடு அணியின் முன்னாள் பயிற்சியாளரான மும்பையைச் சேர்ந்த சுலக்சன் குல்கர்னி சாய் சுதர்சனுக்கு இங்கிலாந்து கண்டிஷனில் விளையாடும் பேட்டிங் டெக்னிக் இல்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் சாய் சுதர்சன் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

யார் இந்த சுலக்சன் குல்கர்னி?

இந்த ரஞ்சித் சீசனுக்கு முந்தைய ரஞ்சி சீசனில் தமிழ்நாட்டு அணிக்கு மும்பையை சேர்ந்த சுலக்சன் குல்கர்னி பயிற்சி ஆளராக இருந்தார். மேலும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி இறுதியில் தோல்வி அடைந்த பிறகு, கேப்டன் சாய் கிஷோர் தவறான முடிவுகளை எடுத்தார் என்று வெளியில் வந்து பேசினார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டு கிரிக்கெட்டில் அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு அவர் தனது பதவியை விட்டு விலகிச் சென்று விட்டார். இந்த வகையில் அவருக்கும் தமிழ்நாட்டு கிரிக்கெட்டுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாய் சுதர்சனிடம் பேட்டிங் டெக்னிக் இல்லை?

இதுகுறித்து சுலக்சன் குல்கர்னி கூறும் பொழுது “சாய் சுதர்சனின் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் சாதனைகள் ஒன்றும் பெரிதாக கிடையாது. நான் தமிழ்நாட்டு அணிக்கு பயிற்சியாளராக இருந்த பொழுது வேகத்திற்கு சாதகமான ஆடுகளத்தை கொண்ட இரண்டு போட்டிகளில் அவரது பேட்டிங்கை பார்த்தேன். அவர் அங்கு சிறப்பாக விளையாடவில்லை. பந்து நகரும் பொழுது அவருடைய பேட்டிங் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டும்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. தவறான நேரத்தில் பார்மை இழந்தது குஜராத்.. எச்சரிக்கை விடுத்த ஆஸி ஜாம்பவான்

“அவர் உடலில் இருந்து பந்தை விலக்கி வைத்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து சூழ்நிலையில் பந்தை வர அனுமதித்து உடலுக்குள் வைத்து மூக்கின் கீழ் விளையாட வேண்டும். எனவே இந்த வகையில் அவர் தேர்ச்சி பெறுவதற்கு இங்கிலாந்து செல்வதற்கு முன்னால் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -