நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி முதல் இடத்தில் இருக்கிறது. இது சம்பந்தமாக பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் ஆர்சிபி நல்ல முறையில் விளையாடிய போதும் அவர்களை ட்ரோல் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணிக்கு மிகவும் நல்ல முறையில் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வென்றார்கள். இதைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை 17 ஆண்டுகள் கழித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்கள். இதனால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.
ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா?
தற்போது ஆர்சிபி அணியை பார்க்கும் பொழுதும் அவர்கள் நம்பிக்கையுடன் விளையாடும் பொழுதும் சிறந்த பிளேயிங் லெவனுடன் இருப்பதாக தெரிகிறது. திடீரென அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு தகுதியான அணியாக கணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு பிளே ஆப் சுற்று மட்டும் இல்லாமல் கோப்பையையும் வெல்லக்கூடிய அளவுக்கு சிறப்பான வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில் ஐபிஎல் தொடரின் முதல் 17 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. இந்த நிலையில் அவர்கள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த போதும் கூட தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது ரசிகர்களை தாண்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கும் இது குறித்து நகைச்சுவையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறித்து பேசி உள்ள வீரேந்தர் சேவாக் “ஆர்சிபி ஏழைகள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கட்டும். அவர்கள் இதை தற்போது புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளட்டும். ஏனென்றால் அவர்கள் எவ்வளவு காலம் இப்படியே முதலிடத்தில் இருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்”
இதையும் படிங்க: ரசல் உன்னை டார்கெட் பண்ணுவாரு.. நான் சொல்றத செய்னு பாண்டியா ஐடியா கொடுத்தார் – அஸ்வானி குமார்
“நான் ஏழை என்று சொன்னதை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பணத்தை வைத்து சொன்னேன் என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் கிடையாது ஏனென்றால் அவர்கள் ஒரு சீசனுக்கு 400 முதல் 500 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பணத்தின் அடிப்படையில் பெரிய பணக்காரர்கள். நான் அதைப் பற்றி பேசவில்லை. இவர்கள் ஒரு கோப்பையை கூட வெல்லாததால் இவர்களை ஏழை என்று குறிப்பிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.






