கேப்டன்சி இவரின் ஆட்டத்தை பாத்திக்கிறது – அறிவுரை அளிக்கும் முன்னாள் இந்திய நட்சத்திரம் சேவாக்

0
107
Virender Sehwag

2022 ஐபிஎல் தொடர் சென்ற மாதம் 26ஆம் தேதி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் ஆண்டைகள் சென்னை மற்றும் மும்பை 3 தொடர் தோல்விகளைப் பெற்றுள்ளது. இளம் வீரர்கள் சிலர் இரண்டு – மூன்று போட்டிகளிலேயே அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர். எதிர்பார்க்காத அமைந்துள்ளது ஒரு சில வெற்றிகள் & நம்பமுடியாத திருப்பங்களுடன் கூடிய அதிரடியான போட்டிகள் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்துள்ளது.

மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அருமையாக செயல்பட்டது. அதன் பலனாக இதுவரை அவர்கள் ஓரளவு நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகள் & கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. இதுவரை அவர்கள் ஆடிய விதத்திற்கு பல கிரிக்கெட் வல்லுனர்கள் நல்ல கருத்துக்களை அளித்தனர்.

- Advertisement -

அதில் முன்னாள் பஞ்சாப் வீரர் சேவாக்கும் ஒருவர். தற்போது வரை நன்றாக செயல்பாட்டிருந்தாலும் பஞ்சாப் அணியிடம் இருக்கும் ஓர் குறையைச் சுட்டிக் காட்டியுள்ளார். முக்கியமாக கேப்டன் பதவியைப் பெற்றப் பின் மயாங்க் அகர்வாலின் பேட்டிங் அடி வாங்கியுள்ளது குறித்துப் பேசியுள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளாசிய 32 ரன்கள் தவிர அவர் வேறு எதுவும் அணிக்கு பங்களிக்கவில்லை. அடுத்த 2 போட்டிகளில் 4, 1, 5 எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவர் கூறியதாவது, “ மாயங்க் அகர்வால் எவ்வாறு அணியை வழி நடத்துகிறார் என்பது பெரிய விசியம் அல்ல. திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை தன் வசம் வைத்துள்ளார். அவர்கள் போட்டியை ஓரளவு சமாளித்து விடுவார்கள். இவர் கேப்டன் பொறுப்பேற்றப் பிறகு பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. சென்ற ஆண்டு வரை அவர் நன்றாக விளையாடினார். இனி அவர் தன்னிடம் கேப்டன் பொறுப்பு இருப்பதை மறந்து எப்போதும் போல் ஆட வேண்டும். ”

மேலும், “ இந்த ஃபார்மட்டில் தான் அதிரடியான ஆட்டத்தைக் கட்ட முடியும். ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க நேரிடும். ஆனால் டி20யைப் பொறுத்த வரை ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட உரிமை உண்டு. ” என்றார்.

- Advertisement -

திறமை வாய்ந்த மயாங்க் அகர்வால் அடுத்து வரும் போட்டிகளில் தன் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.