18 வருஷமா செய்யல.. ரோகித் இதுக்கு மேலயா செய்யப் போறார்.. ரொம்ப ஏமாத்திட்டார் – சேவாக் விமர்சனம்

0
312
Sehwag

ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இத்தோடு 18 வருடங்களாக குறிப்பிடும்படி எதையும் பெரிதாக செய்துவிடவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருப்பது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா இத்தோடு பதினெட்டாவது ஆண்டாக தொடர்ந்து விளையாடுகிறார். இதில் அவர் ஏழு முறை 400கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு மட்டும் 538 ரன்கள் எடுத்திருக்கிறார். மற்ற 10 சீசன்களில் அவர் 300 மற்றும் 200க்கும் மேற்பட்ட ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

ரோஹித் சர்மா மாதிரியான இந்திய அளவில் மிகப் பெரிய ஒரு பேட்ஸ்மேன் யாருக்குமே ஐபிஎல் தொடரில் இவ்வளவு மோசமான புள்ளி விபரங்கள் இல்லை. கே எல் ராகுல் பலமுறை 600 மற்றும் 500 ரன்கள் எடுத்தவராக இருக்கிறார். விராட் கோலி எப்பொழுதும் ஐபிஎல் தொடரில் ரன்கள் குவிக்கும் மெசின் ஆகவே இருந்து வருகிறார். ஆனால் ரோஹித் சர்மா ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் எடுத்தது கிடையாது என்பது சோகமானது.

- Advertisement -

18 வருடமாக செய்யவில்லை

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “ரோஹித் சர்மாவுக்கு நானும் ரசிகன்தான். ஆனால் நான் கேட்பது என்னவென்றால் அந்த 600, 700 ரன்கள் கொண்ட ஐபிஎல் சீசன் அவருக்கு எப்போது வரும் என்பதுதான். 18 வருடங்களாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனும் பொழுது, இன்னும் அப்படி ஒரு சீசன் வராதது மிகவும் தாமதம் இல்லையா? அதுவும் ரோஹித் சர்மா மாதிரி ஒரு வீரருக்கு பெரிய தாமதம் இல்லையா?”

இதையும் படிங்க : இனி சொந்த மைதானத்தில் விளையாட மாட்டோம்.. அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் – ஹைதராபாத் திடீர் முடிவு

“ரோஹித் சர்மா ஒரு முறை கூட 600 ரன்கள் ஐபிஎல் தொடரில் எடுத்ததில்லை. கடைசியாக ஒன்றை எப்போதும் செய்தது கிடையாது. 18 வருடங்கள் இப்படியே ஓடிவிட்டது. 18 வருடங்களாக அவர் செய்யாத ஒன்றை இனிமேல் செய்து விடுவார் என்று நம்மால் எப்படி நம்ப முடியும்?” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஜோடி சிறப்பான முறையில் அமையவில்லை. மேற்கொண்டு இவர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் மீண்டும் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றிக்குள் நுழைய முடியாத சோகம் உருவாகலாம்.

- Advertisement -