லாரா சாதனை நிக்காது.. நான் 270 பந்தில் செய்தை.. இப்ப பசங்க வேற மாதிரி செஞ்சிடுவாங்க – சேவாக் கருத்து

0
374
Sehwag

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சபட்ச அதிரடியில் விளையாடியதை அறிமுகப்படுத்தியவர் ஆக இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் இருக்கிறார். இந்த நிலையில் மாறி வரும் கிரிக்கெட்டில் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் எப்படி? விளையாடப்படும் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மும்முறை முச்சதம் அடித்தவர்கள் யாரும் கிடையாது. ஆனால் இந்த அரிய சாதனையை மூன்று ரன்களில் தவற விட்டவராக இருந்த சேவாக் இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 375 பந்துகளில் 309 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 304 பந்துகளில் 319 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக லாரா 400 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் வருங்காலத்தில் இளைய தலைமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை எளிதாக உடைத்து விடும் என்று சேவாக் கூறியிருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் நேரடியாக விளையாடுவது வெற்றிக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சேவாக் கூறும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிரடியான ஆட்ட முறையை ஒருவர் ஏன் உருவாக்க கூடாது? எல்லாவற்றுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்கள் வந்து நாம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு இப்படி செய்வது நல்லதா கெட்டதா? நான் ஒரு முறை 270 பந்துகள் எடுத்து 300 ரன்கள் அடித்தேன். ஆனால் இதே அளவு பந்தை அடுத்து வரும் தலைமுறை விளையாடினால் 400 ரன்கள் எடுப்பார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவருக்கு ஐந்து ரன்கள் எடுத்து விளையாடுகிறது. நாங்கள் விளையாடும் காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு நான்கு ரன்கள் எடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க : 352 இன்னிங்ஸ்.. பவர் பிளேவில் தெறி பேட்டிங்.. வார்னர் ரெக்கார்டை உடைத்த ரோகித் சர்மா

எனது மூத்த மகனுக்கு தற்பொழுது 17 வயதாகிறது. அவர் டெல்லி அணிக்காக 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் விளையாடியிருக்கிறார். இந்த வாய்ப்புக்காக நிறைய சிறுவர்கள் காத்திருக்கிறார்கள். எங்களுக்கு 18 வயதாக இருக்கும் போது ஐபிஎல் போன்ற தொடர் ஏதும் கிடையாது. ஆனால் இப்போது ஒரு இளைஞர் ஐபிஎல் விளையாடுவது குறித்து யோசிக்க முடியும். இதுபோல ஆரம்பிக்க இந்த வருடம் ஆரம்பிக்கும் டெல்லி பிரிமியர் லீக் நிறைய இளைஞர்களுக்கு உதவும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -