தற்போது இலங்கை கொழும்பு மைதானத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற்ற வருகிறது. இதில் டேவிட் வரலாறை தாண்டி ரோகித் சர்மா சாதனை படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 25 பந்துகளில் 9 பவுண்டரிகள் உடன் 56 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்தவர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் இலங்கை அணி நெருக்கடியில் சிக்கியது.
இந்த நிலையில் இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் வந்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாட வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் வந்தார்கள். ஒரு முனையில் கில் பொறுமையாக விளையாட இன்னொரு முனையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விட்ட இடத்தில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 33 பந்துகளில் பவர் பிளே முடிவதற்குள் அதிரடியாக அரை சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரராக 15,000 ரன்களையும் கடந்தார்.மேலும் அதிவேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரராக 15000 ரன்கள் கடந்த பட்டியலில் டேவிட் வார்னரை தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இதையும் படிங்க: 1 விராட் கோலி.. 16 வீரர்கள்.. ஒட்டுமொத்த இலங்கை அணி.. முதல் ஒருநாள் போட்டியில் சுவாரசியமான சம்பவம்
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் துவக்க ஆட்டக்காரராக 331 இன்னிங்ஸ்களில் 15000 ரன்கள் எடுத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 352 இன்னிங்ஸ்கள், டேவிட் வார்னர் 361 இன்னிங்ஸ்கள் என அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து விளையாடி வந்த ரோஹித் சர்மா 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.