18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா, இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர், அதிக விக்கெட் எடுக்கும் வீரர் மற்றும் கோப்பையை வெல்ல போகும் அணிகள் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில், நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோடு விளையாட உள்ளது. இந்த சீசனைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரோகித் சர்மாவின் தற்போதைய பேட்டிங் மிகச் சிறப்பான நிலையில் உள்ளது.
அதேபோல விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி முதல் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதிக ரன்கள் குவிக்கும் வீரராக கே எல் ராகுலை தேர்வு செய்திருக்கிறார்.
இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரர்கள் பட்டியலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதலிடம் கொடுத்திருக்கும் நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை தேர்வு செய்து இருக்கிறார். இது பலருடைய சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க:பவர் ஹிட்டிங் டி20யில்.. கோலி மாதிரியான பிளேயர்க்கு இதுதான் முக்கிய வேலை – ஆர்சிபி கோச் பேட்டி
இது குறித்து சேவாக் கூறும்போது “கேஎல் ராகுல் தற்போது எந்த பார்மில் இருக்கிறாரோ, அதை வைத்துப் பார்க்கும்போது அவர் அதிக ரன்கள் குவிப்பவராக இருக்க முடியும். மேலும் அவர் அதிக ரன்கள் எடுத்தால் மதிப்புமிக்க வீரராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிக விக்கெட் வீழ்த்தும் பட்டியலில் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்கிறேன். அவர்தான் அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருக்க முடியும். அதேபோல ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியில் மும்பை அல்லது லக்னோவை தேர்வு செய்கிறேன். ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் லக்னோ அணியுடன் செல்கிறேன். ஏனென்றால் அங்கு நண்பர் ஜாகிர் கான் அந்த அணிக்கு பல மாயாஜாலங்களை செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்